Home /News /entertainment /

லவ் யூ குட்டு.. லவ்வரை அறிமுகம் செய்த விஜய் டிவி சீரியல் நடிகை!

லவ் யூ குட்டு.. லவ்வரை அறிமுகம் செய்த விஜய் டிவி சீரியல் நடிகை!

பிரணிகா

பிரணிகா

சோஷியல் மீடியாவில் டிக்டாக் பிரணிகா என்றால் தெரியாதவர்களே இல்லை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாவம் கணேசன் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆன நடிகை பிரணிகா தர்ஷூ தனது காதலனை இன்ஸ்டாவில் அறிமுகம் செய்துள்ளார்.

    தற்சமயம் விஜய் டிவி, ஜீ தமிழ் சீரியல்களில் நடித்து வரும் பிரணிகா  ரசிகர்களின் இளம் கவர்ந்த சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார்.திருச்சியில் இருந்து சென்னை கிளம்பி வந்தவர் நண்பர்களுடன் சேர்ந்து டிக் டாக் செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி அதன் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார்.. சோஷியல் மீடியாவில் டிக்டாக் பிரணிகா என்றால் தெரியாதவர்களே இல்லை அடுத்தடுத்து ஏராளமான ஷார்ட் பிலிம்களில் நடித்து இன்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி கொண்டார் பிரணிகா தக்‌ஷூ.

    rj vigneshkanth marriage : நேரில் வாழ்த்திய சிவகார்த்திகேயன்..இனிதே நடந்த விக்னேஷ்காந்த் திருமணம்!

    சீரியல்களில் நடிக்க தொடங்குவதற்கு முன்பே பிரணிகா குறும்படங்களில் நடித்திருக்கிறார். ஆடிஷனில் சூப்பராக நடித்து பாவம் கணேசன் சீரியலில் ஹீரோயின் தங்கையாக நடிக்க ஒப்பந்தமானார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ என்ற ரியாலிட்டி ஷோவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரை நடிகர் வினோத் பாபு உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஷோவில் டான்ஸ், காமெடி, என கலக்கினார்.


     

     

    அதுமட்டுமில்லை பிரணிகா வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். எங்கள் பாட்டன் சொத்து படத்தில் இரண்டாவது கதாநாயகியாகவும், வடசேரி படத்திலும் நடித்துள்ளார். இப்போது ஓடிடியில் ஒளிப்பரப்பாகும் கனா காணும் காலங்கள், மாரி சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு பிரணிகா தனது இன்ஸ்டாவில் நீண்ட நாள் காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். இதற்கு முன்பு பலமுறை நவநீத் ராஜனுடன் டிக் செய்து செய்து, ரிலீஸ் செய்து பல வீடியோக்கள், புகைப்படங்களை பிரணிகா வெளியிட்டுள்ளார்.

     






    அப்போதெல்லாம் ரசிகர்கள் இவர் உங்கள் காதலரா? என கேட்டுள்ளனர். ஆனால் பிரணிகா மெளனம் கலைக்கவில்லை. இந்நிலையில் இப்போது நவநீத் ராஜனுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து, “ஐ லவ் யூ குட்டு. இந்த வார்த்தையில் எல்லா அர்த்தமும் அடங்கும். நிச்சயம் உன்னை மிஸ் செய்ய மாட்டேன். ஏனென்றால் நீ இல்லாமல் என் வாழ்க்கை முழுமையடையாது” என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர் தான் பிரணிகாவின் காதலன் என்பது உறுதியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி