• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வந்த கொஞ்ச நாளிலே இப்படியா? விஜய் டிவி பிரனிகா டாக்டர் ஆக வேண்டிய பொண்ணாம்!

வந்த கொஞ்ச நாளிலே இப்படியா? விஜய் டிவி பிரனிகா டாக்டர் ஆக வேண்டிய பொண்ணாம்!

விஜய் டிவி பிரனிகா

விஜய் டிவி பிரனிகா

பிரனிகா நீட் தேர்வுக்காக கோச்சிங் சென்றவர். ஆனால் சினிமா மீது அவருக்கு இருந்த விருப்பம் இப்போது அவரை நடிகையாக மாற்றிவிட்டது.

  • Share this:
    விஜய் டிவி பிரனிகா தான் சின்னத்திரையில் ரீசண்ட் க்ரஷ். எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் யூடியூப் பேட்டிகளிலும் பிரனிகாவை பார்க்க முடிகிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி இப்படி ஒரு வளர்ச்சி என்று ஆச்சரியப்பட வைக்கிறார்.

    பாவம் கணேசன் சீரியல் மூலம் விஜய் டிவி சின்னத்திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை பிரனிகா தக்‌ஷூ. சீரியல்களில் நடித்து வரும் பிரனிகா ரசிகர்களின் இளம் கவர்ந்த சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார்.திருச்சியில் இருந்து சென்னை கிளம்பி வந்தவர் நண்பர்களுடன் சேர்ந்து டிக் டாக் செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்தார். அதன் மூலம் தான் அவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. சோஷியல் மீடியாவில் டிக்டாக் பிரனிகா என்றால் தெரியாதவர்களே இல்லை அடுத்தடுத்து ஏராளமான ஷார்ட் பிலிம்களில் இவர் நடித்துள்ளார்.

    டிக் டாக் போன்ற சமூக வலைத்தளம் மூலம் பிரபலமடைந்த பலருக்கும் விஜய் டிவி சீரியல்களில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டிக் டாக் மூலம் வாய்ப்பு கிடைத்து இப்போது சின்னத்திரையில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் பிரனிகா தக்‌ஷூ. இவரின் பெற்றோர் கனவு எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்பது தானாம். பிரனிகா நீட் தேர்வுக்காக கோச்சிங் சென்றவர். ஆனால் சினிமா மீது அவருக்கு இருந்த விருப்பம் இப்போது அவரை நடிகையாக மாற்றிவிட்டது.

    சீரியல்களில் நடிக்க தொடங்குவதற்கு முன்பே பிரனிகா குறும்படங்களில் நடித்திருக்கிறார். ஆடிஷனில் சூப்பராக நடித்து பாவம் கணேசன் சீரியலில் ஹீரோயின் தங்கையாக நடிக்க ஒப்பந்தமானார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ என்ற ரியாலிட்டி ஷோவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரை நடிகர் வினோத் பாபு உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஷோவில் டான்ஸ், காமெடி, என கலக்கினார்.




    அதுமட்டுமில்லை இவரை பற்றி தெரிந்து கொள்ள இன்னும் சுவாரசிய தகவல்கள் இருக்கின்றன. பிரனிகா வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். எங்கள் பாட்டன் சொத்து படத்தில் இரண்டாவது கதாநாயகியாகவும், வடசேரி படத்திலும் நடித்துள்ளார். ஹோம்லி லுக் இவருக்கு சூப்பராக இருப்பதால் சோஷியல் மீடியா ட்ரெண்டான, பிரைடல் லுக் ஃபோட்டோ ஷூட்டில் அதிகம் ஈடுப்பட்டு வருகிறார். இளம் வயதிலே பிசியான சின்னத்திரை நடிகையாக வலம் வரும் பிரனிகாவின் இன்ஸ் பக்கத்தின் ஃபாலோவர்ஸ் 8 லட்டங்களை தாண்டிவிட்டது.கடை திறப்பு, ஆங்கரிங்கில் ஒரு பக்கம் பிரனிகா பிஸி. இந்த குறுகிய காலத்தில் அதுவும் 24 வயதில் இப்படியொரு வளர்ச்சியாக என பொறாமை கொள்ள வைக்கிறது பிரனிகா அடைந்திருக்கும் உயரம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: