வைதேகி காத்திருந்தாள் சீரியலில் முன்னணி வேடத்தில் நடித்து வந்த பிரஜின் தற்போது அதிலிருந்து விலகியுள்ளார்.
விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து, மக்களின் மனதில் நிரந்தரமாக நிற்கும். சீரியல்களைப் பொறுத்தவரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் வித்தியாச கதைகளத்துடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. வரவேற்பைப் பெறாத சீரியல்களின் ஒளிபரப்பை நிறுத்தவும் சேனல் நிர்வாகம் தயங்கியதில்லை.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவி-யில் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற சீரியல் தனது ஒளிபரப்பை தொடங்கியது. இதில் பிரஜின் கதாநாயகனாகவும், சரண்யா கதாநாயகியாகவும் நடித்தனர். சீரியல் ஆரம்பித்து சில வாரக்களே ஆன நிலையில் தற்போது அந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கிறார் பிரஜின். அதற்கு என்ன காரணம் என பலரும் சிந்தித்துக் கொண்டிருக்க, தற்போது அது குறித்து முன்னணி ஊடகத்தில் தெரிவித்திருக்கிறார் பிரஜின்.
அதில், சினிமா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் சீரியலுக்கு தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்பே கமிட்டான படங்கள் என்றாலும் சீரியலையும், சினிமாவையும் பேலன்ஸ் செய்யலாம் என்ற நம்பிக்கையில் சீரியலில் நடிக்க ஓகே சொன்னதாகவும், ஆனால் நாளடைவில் சிரமத்துக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆகையால் சேனல் நிர்வாகத்துடன் சுமூகமாக பேசி, தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டிவி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய பிரஜின் பின்னர் சீரியல் நடிகரானார். அவ்வப்போது படங்களில் நடித்தாலும், அவருக்கு பலமே சின்னத்திரை ரசிகர்கள் தான். தற்போது தொலைக்காட்சிக்கு குட் பை சொல்லியிருக்கும் பிரஜினை எத்தனை பேர் மிஸ் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.