• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • எந்த விமர்சனத்தையும் கண்டு கொள்வதில்லை.. இன்ஸ்டாவை கலக்கும் போல்ட் கேர்ள் சூப்பர் சிங்கர் பிரகதி!

எந்த விமர்சனத்தையும் கண்டு கொள்வதில்லை.. இன்ஸ்டாவை கலக்கும் போல்ட் கேர்ள் சூப்பர் சிங்கர் பிரகதி!

 சூப்பர் சிங்கர் பிரகதி!

சூப்பர் சிங்கர் பிரகதி!

24 வயது ஆகும் பிரகதிக்கு தற்போது இதுக்குறித்த எந்த ஐடியாவும் இல்லை போல. இதுப்போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல கூட அவர் விரும்புவது இல்லை.

 • Share this:
  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பிரகதி குருபிரசாத் இன்ஸ்டாவில் அதிகம் பேர் உற்று நோக்கக்கூடிய பிரபலம் ஆவார்.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இதுவரை பல திறமையுள்ள பாடகர்களையும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தி உலகறிய செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பல பேர், இதன் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர்.அந்த வகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தவர்.

  சில தமிழ் படங்களிலும் இவர் பாடல் பாடியுள்ளார். 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது. அதன் பின்பு தான் விஜய் டியில் சூப்பர் சிங்கரில் இவரின் குரல் ஒலித்தது. சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் சிறு வயது முதலே சங்கீதத்தை கற்று வந்தார் பிரகதி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இதற்கு நடுவில் இவர், நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் கூறப்பட்டது. இவர்களின் புகைப்படங்கள் கூட இணையத்தில் பரவியது. ஆனால் அந்த தகவல் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

  சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் பாலா, பிரகதியை முன்னணி கதாபாத்திரமாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் உலாவின. ஆனால் அதுவும் நடக்கவில்லை. தற்போது பிரகதி குருபிரசாத் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான ஒருவராகவும் இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பாடும் வீடியோக்கள் மற்றும் மாடலிங் செய்யும் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார் .அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. சில நேரங்களில் அவரின் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களால் வசைப்பாடப்படும். ஒருமுறை பிரகதி அதிகம் குடிப்பதாக வலைத்தளத்தில் செய்திகள் பரவ, அதற்கு “இன்டர்நெட்டில் படிக்கும் அனைத்தையும் நம்பி விடாதீர்கள்” என அவரது ரசிகர்களை கேட்டுக் கொண்டிருந்தார் .   
  View this post on Instagram

   

  A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)


  இப்படி, விமர்சனங்களை போல்டாக சந்தித்து தொடர்ந்து தனக்கு பிடித்த வேலையை ஈடுபாடுடன் செய்து கொண்டிருக்கும் பிரகதியிடம் ரசிகர்கள் தொடர்ந்து கல்யாணம் குறித்த கேள்வியை முன் வைத்து வருகிறார்கள். ஆனால் 24 வயது ஆகும் பிரகதிக்கு தற்போது இதுக்குறித்த எந்த ஐடியாவும் இல்லை போல. இதுப்போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல கூட அவர் விரும்புவது இல்லை.
  பாடுவது மட்டுமின்றி கேமரா முன்பு இருப்பதும் அவருக்கு பிடித்திருக்கிறது என்பதால் மாடலிங்கில் தொடர்ந்து ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: