Home /News /entertainment /

ஓடிடியில் மிகப்பெரிய சாதனை செய்த ‘போத்தனூர் தபால் நிலையம்’ கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பு!

ஓடிடியில் மிகப்பெரிய சாதனை செய்த ‘போத்தனூர் தபால் நிலையம்’ கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பு!

போத்தனூர் தபால் நிலையம்

போத்தனூர் தபால் நிலையம்

நகைச்சுவை, சஸ்பென்ஸ் மற்றும் பரபரப்பு நிறைந்த வார இறுதிக்கு தயாராகுங்கள்.

   பரபரப்பான தபால் நிலைய திருட்டு சம்பவத்தை மையமாகக் கொண்ட ‘போத்தனூர் தபால் நிலையம்’ திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் 7–ந்தேதி ஞாயிறு மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

  1990–ம் ஆண்டு கதைக்களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் பார்வையாளர்களை அன்றைய காலக்கட்டத்திற்கே அழைத்துச் செல்லும் என்பது நிச்சயம்.

  ஒரு மனிதனின் வாழ்க்கையையும், அவனது லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான அவனது தேடலையும் அவனது குடும்பத்தை அவமானத்திலிருந்து காப்பாற்றுவதையும் இந்த படம் மையமாகக் கொண்டுள்ளது. ஒரு தபால் அலுவலகத்தில் நடக்கும் திருட்டு சம்பவத்தைக் காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்து இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.  2022–ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை பிரவீன் இயக்கி உள்ளார். இதில் நடிகை அஞ்சலி ராவ் மற்றும் நடிகர்கள் ஜெகன் கிரிஷ், வெங்கட் சுந்தர், சீதாராமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 90களின் பின்னணியில், பிரவீன் (இயக்குனர்-நடிகர் பிரவீன்) அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து, போஸ்ட் மாஸ்டராக இருக்கும் தனது தந்தையைப் போலல்லாமல் (நடிகர் வெங்கட் சுந்தர் நடித்துள்ளார்) கம்ப்யூட்டர் தொழிலைத் தொடங்கி பணக்கார தொழிலதிபராக ஆசைப்படுகிறார். கம்ப்யூட்டர் என்ற வார்த்தை சாமானியர்களுக்கு புரியாத அந்தக் காலக்கட்டத்தில், பிரவீன் கடனுக்காக பல்வேறு வங்கிகளை அணுகுகிறார்.

  ஆனால் அதேசமயம், அவரது தந்தை தபால் அலுவலகத்தின் சேமிப்பு பணத்தை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கிறார். ஆனால் அந்த பணம் திடீரென திருடு போய் விடுகிறது. இந்த நிலையில் அவரது தந்தை குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க, அவர் திருடப்பட்ட பணத்தை மீட்டு வெற்றி பெற்றாரா மற்றும் அவரது லட்சியங்கள் இறுதியாக நிறைவேறியதா என்பதைச் சுற்றியே மீதி கதை செல்கிறது.

  'ஈரமான ரோஜாவே' ஜீவா அம்மாவா இது? ரசிகர்களுக்கு பயங்கர ஷாக்!

  இந்த படம் குறித்து இயக்குனரும் நடிகருமான பிரவீன் கூறுகையில், இது ஒரு வித்தியாசமான கதையாகும். ஏனெனில் ஒரு சிறிய தபால் நிலையத்திற்குள் திருட்டு என்பது கேள்விப்படாத ஒன்றாகும். ஒவ்வொரு காட்சியிலும் 1990–ம் ஆண்டு காலக்கட்டத்தை கொண்டுவருவதில் நாங்கள் கடுமையாக பணியாற்றினோம். இது என்னுடைய முதல் படம் என்பதால், கலர்ஸ் தமிழ் போன்ற பிரபல சேனலில் ஒளிபரப்பாவது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய சொந்தப் படத்தை இயக்குவதற்கும் நடிப்பதற்கும் இது ஒரு முன்னோட்டமாகும். மேலும் இந்த வார இறுதியில் பார்வையாளர்கள் இந்தப்படத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து மிகவும் உற்சாகம் அடைவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

  இப்படியொரு கல்யாணமா? நட்சத்திரா கொடுத்த பதிலால் ஷாக்கான ரசிகர்கள்!

  எனவே நகைச்சுவை, சஸ்பென்ஸ் மற்றும் பரபரப்பு நிறைந்த வார இறுதிக்கு தயாராகுங்கள், போத்தனூர் தபால் நிலையம் திரைப்படத்தை ஞாயிறு, ஆகஸ்ட் 7 மதியம் 2 மணிக்கு, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Movie

  அடுத்த செய்தி