ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபல சீரியல் நடிகை சாலை விபத்தில் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல சீரியல் நடிகை சாலை விபத்தில் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல நடிகை கல்யாணி

பிரபல நடிகை கல்யாணி

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரபல டிவி சீரியல் நடிகை கல்யாணி குராலே ஜாதவ் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Maharashtra, India

  மகாராஷ்டிராவின் கோலாபூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான நடிகை கல்யாணி குராலே ஜாதவ்.இவர் துஜ்யத் ஜீவ் ரங்களா (Tujhyat Jeev Rangla) மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா (Dakkhancha Raja Jyotiba) உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் ஆவார்.

  இவர் கோலாபூரில் தனது வசிப்பிடத்திற்கு அருகே உள்ள ஹலோந்தி என்ற பகுதியில் உணவகம் ஒன்றை கடந்த சில நாள்களுக்கு முன்னர் தான் புதிதாக திறந்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இவர் தனது உணவகத்திற்குச் சென்று வாடிக்கையாளர்களைக் கவனிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு உணவகத்தில் இருந்து கல்யாணி தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது சங்கிலி - கோலாபூர் நெடுஞ்சாலையில் பயணித்த போது ஒரு டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானார். இதில் கல்யாணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  இந்த சம்பவம் நடிகை கல்யாணி உடன் நடத்து வந்த சக நடிகர், நடிகையர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் செய்திகளை குவிந்து வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஷிரோலி பகுதி காவல்துறையினர் ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


  இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர் கல்யாணி, உயிரிழப்பதற்கு 22 மணிநேரத்திற்கு முன்னர் கூட தனது சொந்த உணவகத்தில் சாலெட் சாப்பிடுவதை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Actress, Maharashtra, Road accident, TV Serial