• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரோஜா சீரியலில் களமிறங்கிய பிரபல நடிகை - டி.ஆர்.பி-ஐ எகிற வைக்க சூப்பர் ப்ளான்!

ரோஜா சீரியலில் களமிறங்கிய பிரபல நடிகை - டி.ஆர்.பி-ஐ எகிற வைக்க சூப்பர் ப்ளான்!

ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

கடந்த சில வாரங்களில் முன்னணி நடிகை மற்றும் நடிகர்கள் விலகலால் ரோஜா சீரியல், டி.ஆர்.பியில் பின்வாங்கியது.

  • Share this:
விஜய் டீவிக்கும், சன் டீவிக்கும் ரியாலிட்டி ஷோக்களில் இருக்கும் போட்டியைப் போலவே சீரியல்களை ஒளிபரப்புவதிலும் கடுமையான போட்டி உள்ளது. போதாக்குறைக்கு ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் சேனல்களும் இப்போது புத்தம்புது சீரியல்களை களமிறக்கி வருகின்றன. டஜன் கணக்கான சீரியல்கள் இந்த சேனல்களில் ஒளிபரப்பப்படுவதால், எந்த சீரியலை பார்ப்பது என்று ரசிகர்களுக்கு பெரும் குழப்பமே உள்ளது.

பலர் சீரியல்களின் மறு ஒளிபரப்பு நேரத்தை குறித்து வைத்து சீரியல்களை பார்த்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடிப்பதிலும் சீரியல்களுக்கு இடையே கடும்போட்டு இருக்கிறது. வாரம்தோறும் வெளியிடப்படும் பார்க் கோடில் சன் டீவி சீரியலா? விஜய் டீவி சீரியலா? என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அண்மைக்காலமாக, சன் டீவியில் ஒளிபரப்பாகும் ’ரோஜா’ சீரியல் டி.ஆர்.பியில் முதல் இடத்தில் இருக்கிறது. விஜய் டீவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அடுத்த இடத்தில் இருக்கிறது. இரண்டு சீரியலுக்கும் மிகச் சிறிய இடையவெளியில் மட்டுமே பார்க் கோடிங் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த சில வாரங்களில் முன்னணி நடிகை மற்றும் நடிகர்கள் விலகலால் ரோஜா சீரியல், டி.ஆர்.பியில் பின்வாங்கியது. அந்த நேரத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா, ரோஜாவை டேக் ஓவர் செய்தவிட்டு முதல் இடத்துக்கு சென்று சிம்மாசனமிட்டது.

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே ரோஜா சீரியலின் கதை டேக்கப்பானது. விறுவிறுவென கதை சூடுபிடித்ததால், இரண்டு வார பின்னடைவில் இருந்து மீண்டும் முதல் இடத்துக்கு வந்தது. பாரதி கண்ணம்மாவும், தொடர்ந்து அதே விறுவிறுப்பில் சென்று கொண்டிருக்கிறது.

பாரதி, வெண்பாவை திருமணம் செய்துகொள்ளவில்லை என கண்ணம்மாவுக்கு தெரிந்துவிட்டது. இதனால், வளைகாப்பு நிகழ்ச்சியில் கணவன் பாரதியுடன் ஒரே இடத்தில் ஜோடியாக அமர்ந்து சாப்பிடும் கண்ணம்மா, நீண்ட நாட்களுக்குப் பிறகு செல்ல சேட்டைகளில் ஈடுபடுகிறார். இது வெண்பாவுக்கு பெரும் புகைச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் விரைவில் கண்ணம்மாவும், பாரதியும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என ரசிகள் எதிர்பார்த்துள்ளனர். இந்த காட்சிகளால் பாரதி கண்ணம்மா அதிகமான பார்வைகளை பெற்று வருகிறது.

Also read... விரைவில் புதிய சாதனை படைக்க உள்ள சன் டிவி மெகா சீரியல்.. உற்சாகத்தில் ஆட்டம் போட்ட நடிகர்கள்!

இந்நிலையில், போட்டி சீரியலான ரோஜா தனது இடத்தை தக்க வைக்க புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. அதாவது, வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையான நளினியை சிறப்புத் தோற்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.



வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று, தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கும் ரோஜா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார் நளினி. இதனால், மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனால், ரோஜா சீரியலின் டி.ஆர்.பி மீண்டும் புதிய உச்சத்துக்கு சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: