பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரீ கொடுத்த நடிகை கஸ்தூரி!

46-வது நாளான இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு முதல் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

Web Desk | news18
Updated: August 8, 2019, 1:30 PM IST
பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரீ கொடுத்த நடிகை கஸ்தூரி!
நடிகை கஸ்தூரி
Web Desk | news18
Updated: August 8, 2019, 1:30 PM IST
பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று பிரபல நடிகை கஸ்தூரி என்ட்ரீ கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழில் பிக்பாஸ் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 100 நாட்களுக்கு ஒளிபரப்பாக உள்ளது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைதா, மீரா மிதுன், ரேஷ்மா மற்றும் சரவணன் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்ட பிறது தற்போது 10 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.


இதையடுத்து வைல்ட் கார்டில் உள்ளே செல்ல இருக்கும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடையே அதிகரித்துக்கொண்டே இருந்தது.

ஆல்யா மானசா, பவர் ஸ்டார் சீனிவாசன்,  கஸ்தூரி, ஸ்ரீரெட்டி, சங்கீதா உள்ளிட்டோர் வைல்ட் கார்டில் உள்ளே செல்ல இருக்கும் போட்டியாளர்களின் பட்டியலில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு முதல் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

Loading...அதில் நடிகை கஸ்தூரி வீட்டில் உள்ள அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வீட்டிற்குள் என்ட்ரீ கொடுத்துள்ளார்.வீட்டிற்குள் வந்த உடனேவே கஸ்தூரி உங்களிடன் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று ஷாக்சியிடம் கூறுவது போன்று வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

Also see...

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...