Home /News /entertainment /

இப்படியொரு காரணத்திற்காக சன் டிவியின் முக்கிய சீரியல் முடிகிறதா? ரசிகர்கள் ஷாக்!

இப்படியொரு காரணத்திற்காக சன் டிவியின் முக்கிய சீரியல் முடிகிறதா? ரசிகர்கள் ஷாக்!

பூவே உனக்காக

பூவே உனக்காக

சீரியல் முடிய போவது சீரியலில் நடிக்கும் நடிகர்,  நடிகைகளுக்கே தெரியாது எனவும் கூறப்படுகிறது.

    சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘பூவே உனக்காக’ சீரியல் கூடிய விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லை, இந்த சீரியல் முடிவதற்கான காரணம் குறித்த தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சன் டிவியில் புது முகங்களை வைத்து தொடங்கப்பட்ட சீரியல் ‘பூவே உனக்காக’ ஆரம்பத்தில் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பான தொடர் பல காரணங்களால் இரவு 10 மணிக்கு மாற்றப்பட்டது. இப்போது இரவு 10.30 மணிக்கு சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
    ‘பூவே உனக்காக’ சீரியலில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார் நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா. இந்த சீரியலில் கீர்த்தி என்ற கதாபாரத்திரத்தில் பூவரசியின் தோழியாக இவரின் ரோல் மிகப் பெரிய அளவில் ரீச்சானது. தோழிக்காக தனது காதலன் கதிரை விட்டு கொடுத்து இருப்பார். தொடங்கிய சில நாட்களிலே சீரியல் டி.ஆர்.பியில் ஹிட் அடித்தது.

    விஜய் டிவி பிரியங்கா வீட்டில் நடந்த சுப நிகழ்வு.. வாழ்த்துக்களை பகிரும் ரசிகர்கள்!

    பின்பு பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகுவதாக ஜோவிதா அறிவித்தார். மேல் படிப்புக்காக ஜோவிதா சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. ஆனால் அவர் விலகிய சில நாட்களிலேயே கதிராக நடித்த அருணும் சிரியலில் இருந்து விலகினார்.முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர்கள் அடுத்தடுத்து விலகியதால், பூவே உனக்காக சீரியல் குழுவுக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கலாம் என கிசுகிசுக்கப்பட்டது.இந்நிலையில் தான் கதிர் ரோலில் விஜய் டிவி புகழ் அசீம் என்ட்ரி கொடுத்தார். அவருடன் நடிகை சாயசிங்கும் இப்போது பூவே உனக்காக சீரியலில் நடித்து வருகிறார். பூவரசியாக நடித்த ராதிகா விலகி அவர் ரோலில் வர்ஷினி நடித்து வருகிறார்.

    ரசிகர்களுக்காக அந்த முடிவை எடுத்த ‘அரண்மனை கிளி’ ஜானு!

    கதைப்படி இப்போது பூவரசி மாசமாக இருக்கிறார். அவருக்கு 5 மாதம் வளைக்காப்புக்கு சாயாசிங் தான் சாப்பாடு எடுத்து செல்கிறார். அதற்குள் வில்லி கும்பல் அந்த சாப்பாட்டில் விஷம் கலக்குகிறது. இப்படி திரைக்கதை பரபரப்பாக சென்று கொண்டிருக்க திடீரென்று பூவே உனக்காக சீரியல் முடிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீரியல் முடிய போவது சீரியலில் நடிக்கும் நடிகர்,  நடிகைகளுக்கே தெரியாது என்ற அதிர்ச்சி தகவலும் இணையத்தில் பரவி வருகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)






    இதற்கு காரணம், நடிகர், நடிகைகளுக்கு இருக்கும் சம்பள பாக்கி எனவும் கூறப்படுகிறது. சீரியல் முடியும் விஷயம் தெரிந்தால் சம்பள பாக்கி கேட்டு பிரச்சனை செய்வார்கள் என்ற காரணத்தினால் அவசர அவசரமாக சீரியல் முடிக்கப்பட்டு பிறகு செட்டில்மெண்ட் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி