Home /News /entertainment /

சன் டிவியில் மீண்டும் பூவரசி.. ரசிகர்கள் செம்ம ஹேப்பி!

சன் டிவியில் மீண்டும் பூவரசி.. ரசிகர்கள் செம்ம ஹேப்பி!

பூவே உனக்காக பூவரசி

பூவே உனக்காக பூவரசி

பூவரசி, ராதிகா ப்ரீத்தி மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்க போகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சன் டிவியில் ஒளிப்பரப்பான பூவே உனக்காக தொடர் மூலம் புகழ் பெற்ற நடிகை ராதிகா ப்ரீத்தி மீண்டும் சன் டிவியில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் சேனல்களில் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பது சீரியல்கள் தான். சேனல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்குக்கு கைக்கொடுப்பதும் சீரியல்கள் தான். அந்த வகையில் சன் டிவியில்  முழுக்க முழுக்க புது முகங்களுடன் களம் இறக்கப்பட்டட்ட பூவே உனக்காக சீரியல் இளைஞர்களின் ஃபேவரெட் சீரியல் வரிசையில் குறுகியே காலத்திலே இடம் பிடித்தது. இந்த சீரியலில் பூவரசி கேரக்டரில் ஹீரோயினாக நடிகை ராதிகா ப்ரீத்தி நடித்தார். இவருக்கு ஜோடியாக கதிரவன் என்றார் கேரக்டரில் நடிகர் அருண் நடித்தார். அதே போல் கதிரின் காதலியாக, பூவரசியின் தோழியாக கீர்த்தி ரோலில் நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா நடித்தார்.

    என் வாழ்க்கையில் அப்படியொரு விஷயம் நடக்கவே இல்லை.. கலங்கிய பிக் பாஸ் தாமரை!

    இந்த சீரியல் முக்கிய திருப்பத்தில் சென்றுக் கொண்டிருந்த சமயத்தில் முதலில் ஜோவிதா சீரியலை விட்டு விலகினார். அடுத்து அருண் விலகினார். அவருக்கு பதில்  நடிகர் அசீம் என்ட்ரி கொடுத்தார். பூவரசியாக தொடர்ந்து ராதிகா ப்ரீத்தி நடித்து வந்தார்.பின்பு அவரும் ஒருநாள் சீரியலை விட்டு விலகினார். இதனால் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருந்த சீரியல் மொத்தமாக அடி வாங்கியது. பின்பு சில மாதங்களுக்கு முன்பு பூவே உனக்காக சீரியல் பல காரணங்களால் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இதன் பின்பு ஜோவிதா மீண்டும் சன் டிவியில் அருவி சீரியல் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். அருண், விஜய் டிவி பக்கம் சென்று விட்டார். இப்போது பூவரசி, ராதிகா ப்ரீத்தி மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்க போகிறார். கூடிய விரைவில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ள சீரியலில் ராதிகா லீட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ள ராதிகா ப்ரீத்தி கன்னட படத்திலும் நடித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி