• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சன் டிவி சீரியலுக்கு மீண்டும் வரும் பூவே உனக்காக கீர்த்தி!

சன் டிவி சீரியலுக்கு மீண்டும் வரும் பூவே உனக்காக கீர்த்தி!

பூவே உணக்காக கீர்த்தி

பூவே உணக்காக கீர்த்தி

அவர் சீரியலில் இருந்து விலகியதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது.

  • Share this:
    அண்மையில் பூவே உனக்காக தொடரில் இருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா, தற்போது சன் டிவியின் வேறொரு தொடரில் நடிக்க உள்ளார்.

    90களில் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வந்த லிவிங்ஸ்டன், 1982ம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் கேரக்டரில் நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார். திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல், திரைக்கதை ஆசிரியராகவும் வலம் வந்த இவருக்கு ஜோவிதா, ஜமீனா என்ற இரு மகள் உள்ளனர்.மூத்த மகளான ஜோவிதாவுக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் விரைவில் திரையில் காணலாம் என லிவிங்ஸ்டன் தெரிவித்திருந்தார். அவர் கூறியதுபோலவே தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அம்பிகாவின் மகன் ராம் கேசவ் நாயகனாகவும், லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா நாயகியாகவும் நடிக்கும் ’கலாசல்’ என்ற புதிய படத்துக்கு பூஜையெல்லாம் போடப்பட்டது. மூத்த நடிகர்கள் ராதாரவியெல்லாம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், எந்தவித அறிவிப்பும் இல்லாமல் படம் கைவிடப்பட்டது.

    இதனையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பூவே உனக்காக’ சீரியலில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். சின்னத்திரையில் அறிமுகத் தொடர் என்றாலும், நல்ல நடிப்பை வெளிப்படுத்தி பரவலான கவனிப்பை பெற்றிருந்தார். திடீரென தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பூவே உனக்காக’ சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேல் படிப்புக்காக ஜோவிதா சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. ஆனால் அவர் விலகிய சில நாட்களிலேயே அப்போதைய ஹீரோவும் விலகினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர்கள் அடுத்தடுத்து விலகியதால், பூவே உனக்காக சீரியல் குழுவுக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கலாம் என கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள மற்றொரு புதிய சீரியல் மூலம் சின்னத்திரைக்கு ஜோவிதா ரீ என்டிரி கொடுக்க உள்ளார். கன்னட மொழியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் ஒன்று தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அந்த சீரியலில் அவர் லீட் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில், தற்போது சின்னத்திரையில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகையான அம்பிகா மற்றும் கார்த்திக் வாசு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

    அம்பிகா மகனுடன் பூவே உனக்காக கீர்த்தி


    அம்பிகாவின் மகனுடன் நடிக்கும் வாய்ப்பு கைகூடாமல் போனாலும், இப்போது அவருடனேயே ஜோவிதா நடிக்க உள்ளார். இந்த தகவல் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், மேல் படிப்புக்காக பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிய ஜோவிதா, அதற்குள் மேல் படிப்பை முடித்துவிட்டாரா?, அப்போது அவர் சீரியலில் இருந்து விலகியதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது என நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கொளுத்தி போட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: