• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • போன வேகத்திலே மீண்டும் சன் டிவி சீரியலுக்கு திரும்பிய லிவிங்ஸ்டன் மகள்!

போன வேகத்திலே மீண்டும் சன் டிவி சீரியலுக்கு திரும்பிய லிவிங்ஸ்டன் மகள்!

ஜோவிதா லிவிங்ஸ்டன்

ஜோவிதா லிவிங்ஸ்டன்

சன் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் ஜோவிதா லிவிங்ஸ்டன் நடிப்பது உறுதியாகி உள்ளது.

  • Share this:
    சன் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பூவே உனக்காக.

    இந்த சீரியலில் ஹீரோயினாக பூவரசி என்ற கேரக்டரில் நடிகை ராதிகா பிரீத்தி நடித்து வருகிறார். ஹீரோவாக கதிர் என்ற ரோலில் நடிகர் அருண் நடித்து வந்தார். தற்போது ஹீரோ கேரக்டரில் இவருக்கு பதிலாக பிரபல சீரியல் நடிகர் அசீம் நடித்து வருகிறார். முன்னதாக ஹீரோயினின் தோழியாக கீர்த்தி என்ற முக்கிய கேரக்டரில் பிரபல நடிகர் லிவிங்க்ஸ்டனின் மகளான ஜோவிதா லிவிங்ஸ்டன்  நடித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்தார் ஜோவிதா லிவிங்ஸ்டன்.

    இது சின்னத்திரை வட்டாரத்திலும், ரசிகர்களின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது திடீர் விலகலின் பின்னணியில் ஏதேனும் பிரச்சனைகள் நிகழ்ந்திருக்கலாம் என்று வதந்தி பரவியதே இதற்கு காரணம். தவிர ஜோவிதா தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களின் இதயங்களை கவர்ந்திருந்தார். எனவே வதந்திகளுக்கு தனது இன்ஸ்டா மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் ஜோவிதா. தான் மேற்படிப்பை தொடர வேண்டிய சூழலில் இருப்பதால், வேறுவழியின்றி பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகவும், தனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் மற்றும் ரசிகர்களின் ஆதரவிற்கும் நன்றி என்று உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டிருந்தார்.கடைசியாக கூடிய விரைவில் எனது அடுத்த ப்ராஜெக்ட்டுடன் விரைவில் உங்களை சந்திப்பேன் என்றும் இந்த போஸ்ட்டில் ஜோவிதா கூறி இருந்தார்.
    தனது காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகர் லிவிங்ஸ்டனுக்கு, ஜோவிதா மூத்த மகள் ஆவார். ஜோவிதாவின் சகோதரி பெயர் ஜெம்மா. இந்நிலையில் லிவிங்ஸ்டனின் மூத்த மகளான ஜோவிதா முன்னர் கூறியபடி, ஒரு புதிய சீரியலுடன் சின்னத்திரையில் மீண்டும் நுழைய தயாராக இருப்பதாக தெரிகிறது.

    தனது இன்ஸ்டா பேஜில் ஸ்டுடியோவில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்திருக்கும் ஜோவிதா லிவிங்ஸ்டன், "உங்கள் ஆன்மாவை உற்சாகமாக செயல்பட வைப்பதை தேடுங்கள் என்ற கேப்ஷனுடன் #freshbegginings #cantwait #suntv உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை சேர்த்து கேப்ஷன் கொடுத்து உள்ளார். இதன் மூலம் மீண்டும் சன் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் ஜோவிதா லிவிங்ஸ்டன் நடிப்பது உறுதியாகி உள்ளது.




    இவர் நடிக்கும் புதிய சீரியல் கன்னட சீரியலான 'கஸ்தூரி நிவாசா'-வின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்றும், இதற்கான ஷூட்டிங் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'பூவே பூச்சூடவா' புகழ் நடிகர் கார்த்திக் வாசு மற்றும் மூத்த தமிழ் நடிகை அம்பிகா ஆகியோர் இந்த புதிய சீரியலில் முக்கிய ரோல்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: