ஜீ தமிழில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிரபல ஹிட் சீரியல்களான பூவே பூச்சூடவா மற்றும் யாரடி நீ மோகினி உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கேரக்டர் ரோல்களில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சீரியல் நடிகை தனலட்சுமி.
பூவே பூச்சூடவா சீரியலில் அணு என்ற கேரக்டரிலும், மிக பெரிய ரசிகர் பட்டாளத்தைகொண்டிருந்த மற்றும் சுவாரஸ்யம் & அமானுஷ்யங்கள் கொண்டு ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்த யாரடி நீ மோகினி சீரியலில் சிம்ரன் என்ற கேரக்டரிலும் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர்.இவர் ரசிகர்களிடையே பிரபலமாக இருக்க மற்றொரு மிகப்பெரிய காரணம் ஒன்றும் இருக்கிறது. அது தான் இவரது காதல் வாழ்க்கை. இன்றைய காலகட்டத்தில் காதல் படும் பாட்டை யாரும், யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த சூழலில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிவா என்பவரை காதலித்து வந்த நடிகை தனலட்சுமி, கடந்த ஆண்டு தனது 10 ஆண்டு காதலரையே ஊரறிய திருமணம் செய்து கொண்டார். நடிகை தனலட்சுமி - சிவா தம்பதியரின் திருமண நிகழ்வு ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியது. உண்மை காதலுக்கு எடுத்துக்காட்டாக இருவரும் வாழ்ந்து வருவதாக கூறி மேலும் பல்லாண்டு இதே மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற வாழ்த்துக்களை ரசிகர்களிடம் இருந்து மனமார பெற்றது தனலட்சுமி - சிவா ஜோடி.
நீண்ட கால நண்பர்கள் மற்றும் காதலர்களின் இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தினார்கள். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இந்த ஜோடி, இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும். தவிர பிற ஜோடிகளுக்கு கப்புல் கோல்ஸ் டார்கெட்களையும் நிர்ணயித்து நெட்டிசன்களை கவர்ந்து வந்தனர். இந்நிலையில் தனலட்சுமி - சிவா ஜோடி திருமணம் செய்து ஓராண்டு ஆகிவிட்டது.
சமீபத்தில் இந்த பிரபல ஜோடி தங்களது முதலாம்
திருமண நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளது. இது தொடர்பாக dhanushiva_official என்ற தங்களது அதிகாரபூர்வ இன்ஸ்டா பேஜில் போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர் செய்துள்ள இவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தங்களது திருமண நாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி உள்ளதை ரசிகர்களிடம் வெளிப்படுத்தி உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் இந்த போஸ்ட்டில் நடிகை
தனலட்சுமி, "இந்த 10 வருட காதல் மற்றும் நம்பிக்கை மற்றும் 1 வருட திருமண வாழ்க்கை ஆகியவற்றுக்கு எல்லா நேரங்களிலும் என் அன்பானவருக்கு நான் சொல்ல வேண்டியது 'உங்கள் நிபந்தனையற்ற காதலுக்கு மிக்க நன்றி'"என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். தவிர VJ நிவேதிதா, ரேவதி ஞானமுருகன், உமா பத்மநாபன், ஈஸ்வர் ரகுநாதன் மற்றும் பலர் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.