1140 எபிசோடுகள்... முடிவுக்கு வருகிறது பிரபல சீரியல்! சோகத்தில் ரசிகர்கள்

இவருக்காகவே இந்த சீரியலை பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்

இவருக்காகவே இந்த சீரியலை பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்

 • Share this:
  பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தமிழ் டிவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது ஜீ தமிழ் சேனல்.

  ரசிகர்களை கவரும் வகையில் பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பினாலும் கூட பல முன்னணி சேனல்களை போலவே ஜீ தமிழிலும் ஏராளமான ஹிட் சீரியல்கள் நாள்தோறும் ஒளிபரப்பாகி ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் காதலும் அதன் விளைவாக குடும்ப உறவில் ஏற்படும் சிக்கல்களையும் ரசிக்கும் படி விறுவிறுப்பாக காட்டி வரும் "பூவே பூச்சூடவா" சீரியல் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்று.

  ரசிகர்களின் மனதை கவர்ந்த இந்த சீரியல் வெகு விரைவில் முடிய உள்ளது. இந்த தகவலை பூவே பூச்சூடவா சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். கார்த்திக் வாசுதேவன், ரேஷ்மா முரளிதரன், நடிகை கிருத்திகா லட்டு, மதன் பாண்டியன், ஸ்ரீ வர்ஷன் உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் நடித்து வருகிறார்கள். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24 ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியல் பலமுறை நேரமாற்றங்களை சந்தித்த பிறகு தற்போது இரவு 10.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் ஹீரோயினாக சக்தி என்ற கேரக்டரில் நடிகை ரேஷ்மா முரளிதரன் நடித்து வருகிறார்.

  நடிகை ரேஷ்மா தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார். இவருக்காகவே இந்த சீரியலை பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல்வேறு சுவாரசிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ள தகவல் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்து இருக்கிறது.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  ɪ ꜱ ᴠ ᴀ ʀ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tv_actor_isvar_official)


  பூவே பூச்சூடவாவில் மஹேந்திர சிங் என்ற மஹி வேடத்தில் நடித்து வருகிறார் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன். இவர் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். சமீபத்தில் பூவே பூச்சூடவா ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட தன்னுடைய போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அந்த போட்டோவை போஸ்ட் செய்துள்ள நடிகர் ஈஸ்வர் ரகுநாதன், பூவே பூச்சூடவா சீரியல் நிறைவடைவதை குறிக்கும் வகையில் "முடிவு நெருங்கிவிட்டது -பூவே பூச்சூடவா (ᴛʜᴇ ᴇɴᴅ ɪꜱ ɴᴇᴀʀ - ᴘᴏᴏᴠᴇ ᴘᴏᴏᴄʜᴜᴅᴀᴠᴀ) என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். சீரியல் குழுவினருடன் இருக்கும் மற்றொரு போட்டோவையும் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். சுமார் 1140 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் பூவே பூச்சூடவா சீரியல் விரைவில் முடிவடைவதை இதன் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: