• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • அவமானங்களை வெகுமானமாக்கி வென்றேன்.. வெற்றி ரகசியம் சொல்லும் பூவே பூச்சூடவா மீனுக்குட்டி!

அவமானங்களை வெகுமானமாக்கி வென்றேன்.. வெற்றி ரகசியம் சொல்லும் பூவே பூச்சூடவா மீனுக்குட்டி!

திறமை இருந்தும் தோற்றத்தால் நிறத்தால் நிராகரிப்பட்ட நடிகைகள் இங்கு ஏராளம்.

 • Share this:
  ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் பூவே பூச்சூடவா சீரியலில் மீனுக்குட்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கிர்த்திகா லட்டு பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள்.

  சினிமா என்று வந்துவிட்டாலே தோற்றம் மிகவும் முக்கியமான ஒன்று. அதில் பெண்கள் என்றால் கண்டிப்பாக தோற்றம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. திறமை இருந்தும் தோற்றத்தால் நிறத்தால் நிராகரிப்பட்ட நடிகைகள் இங்கு ஏராளம். அந்த வரிசையில் பல்வேறு உருவ கேலிகள், கிண்டல்களைக் கடந்து சின்னத்திரையில் தனக்கென தனி பாதை அமைத்துக் கொண்ட கிர்த்திகா லட்டு சின்னத்திரையில் கண்ட வெற்றி கண்டிப்பாக பாராட்டக்குரியது.

  சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், திருமுருகன் தயாரித்து இயக்கிய "தேன் நிலவு"சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் மீனு குட்டி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். மீனாட்சி என்ற இவரின் கதாபாத்திரத்தை சுந்தர் மீனுக்குட்டி மீனுக்குட்டி என்று கூப்பிட்டதாலே ஃபேமஸ் ஆனது. அதுமட்டுமில்லை இந்த சீரியலின் ஆரம்பத்தில் சுந்தருக்கும் மீனாட்சிக்குமான காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Krithikaa Laddu ☺ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@krithikaaladdu)


  அதனைத்தொடர்ந்து சன் டிவியில் பைரவி, பொன்னுஞ்சல் சீரியல் மற்றும் செலிபிரெட்டி கிச்சன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டு வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை துவக்கினார். சென்னை 28 திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் நிதின் சத்யாவின் மனைவியாக நடித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதும் அதிக மேக் அப் இல்லாத தோற்றமும் தான் கிர்த்திகாவை ரசிகர்களிடம் எளிதில் கொண்டு போய் சேர்த்தது. திருமணத்திற்கு பிறகு கிர்த்திகா மிகவும் குண்டாகினார். உடல் பருமனுடன் இருந்த இவரை பலரும் கேலி கிண்டல்கள் செய்தனர்.உனக்கெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது எனவும் அவமதித்தனர். ஆனால் அவை எல்லாவற்றையும் கடந்து நின்று சின்னத்திரையில் வெற்றி பெற்றார் கிர்த்திகா லட்டு. ஒருமுறை உருவ கேலிகள் குறித்து பேட்டியில் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். தனது மகளுக்காக மட்டுமே உயிர் வாழ்வதாகவும் உருக்கமாக பதிவிட்டிருந்தார். கிர்த்திகாவின் அந்த பேட்டி பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இன்று கிர்த்திகாவிடம் பலரும் வெயிட் லாஸ் டிப்ஸ் கேட்டு அவரை தொடர்பு கொள்கின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: