6 மாதங்களில் 37 கிலோ வரை உடல் எடையை குறைத்த பிரபல சீரியல் நடிகை!

பூவே பூச்சூடவா சீரியல் நடிகை

கிருத்திகா தனது உருவமாற்றம் குறித்த ரகசியத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 • Share this:
  ஜீ தமிழ் சேனலில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் பூவே பூச்சூடவா.

  இதில் சக்தியின் மூத்த சகோதரியாகவும், சுந்தரின் மனைவியாகவும் மீனாட்சி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை கிருத்திகா லட்டு. சின்னத்திரை ரசிகர்கள் இவரை இதற்கு முன் பல சீரியல்களில் பார்த்திருக்கலாம். சன் டிவியில் ஒளிபரப்பான அமானுஷ்ய மற்றும் மர்மங்கள் நிறைந்த பைரவி- ஆவிகளுக்கு பிரியமானவள் என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார். ராஜ் டிவி-யின் ஹலோ ஷியாமளா, பொன்னுஞ்சல் உள்ளிட்ட சீரியல்களில் தோன்றி இருக்கிறார்.

  சன் டிவி-க்கு தொடர்ந்து சீரியல்களை தந்த டைரக்டர்களில் ஒருவரான திருமுருகன் தயாரித்து இயக்கிய தேன் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை கிருத்திகா லட்டு. சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். குறிப்பாக சொன்னால் சென்னை 28 திரைப்படத்தின் செகண்ட் பார்ட்டான Chennai 28 2-வில் நடிகர் நிதின் சத்யாவின் மனைவியாக நடித்திருக்கிறார் நடிகை கிருத்திகா. தற்போது ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியலில் மீனு குட்டி (மீனாட்சி) என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் தனது பழைய உருவம் மற்றும் புதிய உருவ அமைப்பு இடையிலான வேறுபாட்டை காட்டும் வகையில் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக் ஆகினர். ஏனென்றால் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னர் கிருத்திகா மிகவும் உடல் பருமனாக இருந்துள்ளார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அப்படி இருந்த கிருத்திகாவா இது என வாய் பிளந்தனர். இதனிடையே சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த கிருத்திகா தனது உருவமாற்றம் குறித்த ரகசியத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.  சிறு வயதிலிருந்தே சற்று குண்டான உருவத்தில் இருந்த தன்னால் ஒருகட்டத்தில் பிடித்த ஆடையை கூட வாங்கி போட்டு கொள்ள முடியாத நிலை இருந்ததாக உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார். தன் மீதே தனக்கு ஏற்பட்ட கோபம் மற்றும் உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்ற வெறியே தனது இந்த ட்ரான்ஸ்பர்மேஷனுக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். 70 கிலோ எடையில் இருந்த தான் திடீரென 99 கிலோ வரை எடை அதிகரித்ததாக பேட்டியில் கூறி இருக்கிறார். பிரசவத்திற்கு பின்னரே தனக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டது என்றார்.

  சரியான டயட் நிபுணரின் மேற்பார்வையில் திரவ உணவுமுறை எனப்படும் லிக்விட் டயட்டை பின்பற்றி சுமார் 37 கிலோ வரை உடல் எடையை 6 மாதத்திற்குள் குறைத்ததாக தனது ட்ரான்ஸ்பர்மேஷன் ரகசியம் பற்றி அந்த பேட்டியில் வெளிப்படுத்தினார் நடிகை கிருத்திகா. அதே போல இந்த டயட்டை பின்பற்றும் போது சுமார் 1 மாதம் வரை பெரிதாக எந்த ரிசல்ட்டும் தெரியவில்லை என்றும் ஆனால் டயட் நிபுணர் இதற்கு பொறுமை அவசியம் என்று கூறியதால் பின்னர் பொறுமையை வளர்த்து கொண்டதாகவும் நடிகை கிருத்திகா தெரிவித்து இருக்கிறார். லிக்விட் டயட்டுடன் கூடவே வாக்கிங், தோப்புகரணம் போன்ற பல சின்னச்சின்ன விஷயங்களை செய்தது எடை குறைப்பிற்கு உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: