பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலகல்? நடிகை ரேஷ்மா விளக்கம்

நடிகை ரேஷ்மா

பூவே பூச்சூடவா (Poove Poochoodava) சீரியலில் இருந்து விலகுவதாக வந்த தகவலுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரேஷ்மா (Reshma Reya) விளக்கம் கொடுத்துள்ளார்.

  • Share this:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017 ஆம் ஆண்டு முதல் பூவே பூச்சூடவா சீரியல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. கார்த்திக் வாசுதேவன், ரேஷ்மா முரளிதரன், கிருதிகா லட்டு, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். காதலால் குடும்பத்துக்குள் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதலில் இந்த தொடரை இயக்கிய மணிகண்டன் குமார் 2019 ஆம் ஆண்டுடன் விலகிய நிலையில் தற்போது இயக்குநர் ரத்தினம் வாசுதேவன் இயக்கி வருகிறார்.

சீரியலின் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒன்றான சக்தி கேரக்டரில் ரேஷ்மா நடித்து வருகிறார். டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட அவருக்கு இந்த சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய முதல் சீரியல் என்றாலும், முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று ரேஷ்மா நடிப்பில் மற்றவர்களை அசரடித்து வருகிறார். அவருக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் அதிகம் உள்ள நிலையில், திடீரென அந்த சீரியலில் இருந்து அவர் விலகுவதாக தகவல்கள் பரவின. பலரும் இந்த தகவல் உண்மையா? அல்லது வதந்தியா? என ரேஷ்மாவின் சமூகவலைதள பக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு கேட்கத் தொடங்கினர்.

Also Read : "ஹீரோ தொந்தரவு செய்கிறார்" - 'கண்ணான கண்ணே' சீரியல் நடிகை ஓபன் டாக்!

இதற்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ள ரேஷ்மா, பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து தான் விலகுவதாக பரவி வரும் தகவலில் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ளார். தன்னுடைய கதாப்பாத்திரத்தில் வேறொரு நடிகை நடிக்க இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தயவு செய்து தவறான தகவல்களை பரப்பாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர், யாரும் வருத்தப்பட வேண்டாம், நான் திரும்ப வருவேன் எனக் கூறியுள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Dharanees (@reshma_muralidaran_love)


ஏர்ஹோஸ்டர்ஸாக வேண்டும் என்ற கனவில் படித்து வந்த ரேஷ்மா முரளிதரன், படிப்பை முடிந்தபிறகு மாடலிங் துறையில் கால்பதித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் முதல் 10 இடங்களுக்கு வந்த அவர், அடுத்த ஆண்டு ஷோவில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தினார். எம்.பி படிக்க நினைத்திருந்தபோது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு ரேஷ்மாவுக்கு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர், ராகவுடன் இணைந்து அற்புதமான நடனத்தை வெளிக்காட்டினார். இதன் தொடர்ச்சியாக பூவே பூச்சூடவா சீரியலில் சக்தி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா, நகைச்சுவையாகவும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கும் பெண்ணாகவும் நடித்து வருகிறார்.

Also Read : சன் டிவி-யில் ரீ எண்ட்ரியான நடிகர் அசீம் - எந்த சீரியல் தெரியுமா?

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர்ஸ் தொடரில் டெய்லர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பூவே பூச்சூடவா தொடரில் நடிக்கும் மதன் பாண்டியனை காதலிக்கும் அவர், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
Published by:Vijay R
First published: