கலர்ஸ் தமிழின் 'எங்க வீட்டு மீனாட்சி' மூலம் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்விக்க வரும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ்!

பூர்ணிமா

எங்க வீட்டு மீனாட்சியை தவிர பூர்ணிமா சன் டிவி-யில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் விஜயலட்சுமியாகவும், ஜீ தமிழ் சீரியலான சூர்யவம்சத்தில் அன்னபூரணியாகவும் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.

  • Share this:
    பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மனைவியான நடிகை பூர்ணிமா பாக்யராஜ் கலர்ஸ் தமிழ் சேனலில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள "எங்க வீட்டு மீனாட்சி" என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். இது தொடர்பான தகவல் தனது இன்ஸ்டா பேஜில் ஷேர் செய்துள்ளார் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். எங்க வீட்டு மீனாட்சி சீரியலின் ப்ரமோ வீடியோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார் நடிகை பூர்ணிமா.

    இதனிடையே எங்க வீட்டு மீனாட்சி சீரியலில் நடிப்பது பற்றி தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார் பூர்ணிமா. எங்க வீட்டு மீனாட்சியை தவிர பூர்ணிமா சன் டிவி-யில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் விஜயலட்சுமியாகவும், ஜீ தமிழ் சீரியலான சூர்யவம்சத்தில் அன்னபூரணியாகவும் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். இதனிடையே தான் நடிக்க இருக்கும் இந்த புதிய சீரியல் பற்றி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் கூறுகையில், "முதல் முறையாக கலர்ஸ் தமிழ் சேனலுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நிகழ்ச்சியில் பணியாற்றுவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியை அளிக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எங்க வீட்டு மீனாட்சி சீரியல் ஒரு புத்துணர்ச்சியூட்டும் கதைக்களத்தை தாங்கி வரும் மற்றும் இந்த சீரியல் ஒரு திறமை வாய்ந்த டீமை கொண்டுள்ளது. இதன் காரணமாக "எங்க வீட்டு மீனாட்சி" சீரியலின் ஒரு பகுதியாக நான் இணைந்திருப்பது எனக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. சின்னத்திரை ரசிகர்களை இந்த சீரியலில் நடிப்பதன் மூலம் மகிழ்விக்க முடியும், அவர்கள் எனது நடிப்பை ரசித்து பார்ப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறி இருக்கிறார். இதனிடையே "ஒரு சுவாரஸ்யமான புதிய சீரியல் விரைவில் வருகிறது. தயவுசெய்து பார்த்து "எங்க வீட்டு மீனாட்சியை ஆதரிக்க வேண்டும்" என்று சீரியல் டீசரை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து ரசிகர்களை கேட்டு கொண்டுள்ளார் நடிகை பூர்ணிமா பாக்யராஜ்.




    இந்த சீரியலின் முக்கிய கேரக்டர்களை நாயகி மீனாட்சி கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதா சிவதாஸ் நேயர்களுக்கு அறிமுகப்படுத்துவது போல இந்த ப்ரமோ வீடியோ இருக்கிறது. இந்த வீடியோ ஒரு பெரிய பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்திற்கான ஒரு முன்னோட்டத்தை நமக்கு காட்டுகிறது. இந்த அறிமுக வீடியோவில் நடிகை பூர்ணிமா இடம்பெறவில்லை.

    Also read... பிரபல காமெடி நடிகரின் மகனுக்கு ஜோடியான பிரபல சீரியல் நடிகை!

    எனவே இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடிக்கும் பூர்ணிமாவின் அறிமுகம் சீரியலின் சிறப்பம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்க வீட்டு மீனாட்சி சீரியலில் வள்ளியம்மா என்ற குடும்பத் தலைவியாக நடிக்கிறார் பூர்ணிமா. கதை நாயகனாக சிதம்பரம் என்ற கேரக்டரில் பிரபல காமெடி நடிகர் ஜீவா தங்கவேல் நடிக்கிறார்.

    மகிழ்ச்சியான குடும்ப நிகழ்வுக்காக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூறி இருக்கும் போது, இதில் நீ பங்கேற்காமல் விலகியே இரு என்று வள்ளியம்மா, சிதம்பரத்தை கேட்பது போல கதை செல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்பதை பார்வையாளர்கள் யூகிக்க வைக்கிறது இந்த சீரியல். அநேகமாக வரும் செப்டம்பர் முதல் எங்க வீட்டு மீனாட்சி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Vinothini Aandisamy
    First published: