• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரோஜா சீரியலில் நீடித்த சஸ்பென்ஸ் - சூட்டிங் ஸ்பாட்டுக்கு திரும்பிய பூஜா!

ரோஜா சீரியலில் நீடித்த சஸ்பென்ஸ் - சூட்டிங் ஸ்பாட்டுக்கு திரும்பிய பூஜா!

சூட்டிங் ஸ்பாட்டுக்கு திரும்பிய பூஜா

சூட்டிங் ஸ்பாட்டுக்கு திரும்பிய பூஜா

இப்போதைய சூழலில் ரோஜாவின் அம்மா யார்? என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

  • Share this:
கடந்த சில எபிசோடுகளில் காணாமல்போன பூஜா, மீண்டும் ரோஜா சீரியல் சூட்டிங் ஸ்பாட்டுக்கு திரும்பியுள்ளார்.

சன் டிவியின் டி.ஆர்.பி கிங்காக இருக்கும் ரோஜா சீரியல் மீண்டும் அந்த சிம்மாசனத்தை தக்கவைக்க பரபரப்பு திரும்பியுள்ளது. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்கள் டஃப் பைட் கொடுப்பதால், அதனை விஞ்சும் வகையில் கதைக்களம் மீண்டும் சூடுபிடிக்கும் அளவுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்ததால் டி.ஆர்.பியில் சரிவை சந்தித்தது. இதனையடுத்து நாடகத்தின் கதையாசிரியர் மாற்றப்பட்டு, புதிய கதாசிரியர் டீமுக்குள் வந்துள்ளார். இவரின் வருகையால் கதையில் மீண்டும் டிவிஸ்ட் மற்றும் பரபரப்பு எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போதைய சூழலில் ரோஜாவின் அம்மா யார்? என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இன்னும் சில எபிசோடுகளில் அந்த டிவிஸ்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மீண்டும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார் பூஜா. உண்மையான பெயர் ஸ்மிருதி காஸ்யப். இந்த தொடரில் பூஜா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அஷ்வின் - பூஜா காம்பிநேஷனுக்காகவே சீரியல் பார்க்கும் தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. ஆனால், கடந்த சில வாரங்களாக அஷ்வின் - பூஜா தொடர்பான எந்த காட்சிகளும் சீரியலில் இடம்பெறவில்லை. ரசிகர்களுக்கும் இது புரியாத புதிராக இருந்து வந்தது.

அந்த புதிருக்கு விடையளிக்கும் விதமாக மீண்டும் ரோஜா சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார் பூஜா. இதனால், சீரியலில் இன்னும் டிவிஸ்டுகள் மற்றும் பரபரப்பு எகிறுவது உறுதியாகியுள்ளது. பூஜாவாக நடிக்கும் ஸ்மிருதி காஷ்யப் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். படிப்புக்காக மும்பை சென்ற அவர், அங்கு படிப்பை முடித்தவுடன் ஹிந்தி சின்னத்திரைக்குள் நுழைந்தார். பல்வேறு சீரியல்களில் நடித்த அவருக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், அங்கு கிடைத்த அனுபவம் மூலம் ரோஜா சீரியலுக்குள்ளும் அடியெடுத்து வைத்தார். 
View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)


சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் தான் அவருடைய முதல் தமிழ் சீரியல். இதில் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய நடிப்புக்காக தனி ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர், கலர்புல் படங்களை பதிவேற்றி வருகிறார்.

Also read... இரண்டு மணி நேரமும் ஒரே எக்ஸ்பிரஷன் - விஜய் ஆண்டனியை விமர்சித்த பிரபல இயக்குனர்!

கிளாசிக் முதல் மார்டன் வரை அனைத்து டிரஸ்களிலும் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அண்மையில் தொப்புள் தெரியும் வகையில் அவர் எடுத்த புகைப்படம், இளசுகளிடையே நல்ல ரீச்சைக் கொடுத்தது. வெள்ளித்திரை பிரபலங்களுக்கு இணையாக அவருடைய புகைப்படம் வைரலாக பரவியது. கிளாமர் மட்டுமில்லாமல் சேலையிலும் புகைப்படம் எடுத்துள்ளார். பச்சை கலர் சேலையில் எடுத்த புகைப்படத்தில் செம கியூட்டாகவும் இருக்கிறார் பூஜா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: