Home /News /entertainment /

இனிமேல் என்னை வெறுப்பீர்கள்.. பிரபல சின்னத்திரை நடிகையின் ஷாக்கிங் பதிவு!

இனிமேல் என்னை வெறுப்பீர்கள்.. பிரபல சின்னத்திரை நடிகையின் ஷாக்கிங் பதிவு!

பூஜா லோகேஷ்

பூஜா லோகேஷ்

நடிகை பூஜா. நிச்சயம் என்னை நீங்கள் வெறுப்பீர்கள் என்று பூஜா குறிப்பிட்டிருப்பதன் மூலம் வழக்கம் போல இந்த சீரியலிலும் நெகட்டிவ் கேரக்டரில் தான் நடிக்க போகிறார்

    தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் உணர்வில் கலந்த ஒன்றாக இருக்கிறது சீரியல். பல ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்தியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக  பல கட்ட வளர்ச்சிகளை பெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பெற்றுள்ளன சீரியல்கள். சீரியல்களில் நடிக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயின்களை தவிர மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த வில்லன் மற்றும் வில்லிகளும் உண்டு. பெரும்பாலும் சீரியல்களில் வில்லன் ரோலை விட வில்லி ரோல்கள் அதிகம் கவனிக்கப்படுகிறன.

    அந்த வகையில் பல சீரியல்களில் வில்லி கேரக்டர்களில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூஜா லோகேஷ். பெங்களூருவில் பிறந்த இவரது குடும்ப உறுப்பினர்களில் பலர் சினிமாவை சேர்ந்தவர்கள். இவரது தந்தை லோகேஷ் கன்னடத்தில் மிகவும் பிரபலமான நாடக கலைஞர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவரது தாயார் கிரிஜா லோகேஷ் பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார்.

    இதையும் படிங்க.. விஜய் டிவியில் மீண்டும் பிக் பாஸ் ராஜூ.. அந்த சீரியலில் திரும்பவும் வர போகிறாரா?

    எனவே 14 வயதிலேயே ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக பல கன்னட சீரியல்கள் மற்றும் சினிமாவில் நடித்திருக்கிறார். மேலும் பூஜா ஒரு கிளாசிக்கல் டான்சர் மற்றும் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று உள்ளார். தமிழில் செல்வி, குங்குமம், முந்தானை முடிச்சு, மஹாபாரதம், கல்கி, கீதாஞ்சலி, உயிர்மெய், அத்திப்பூக்கள், முத்தாரம் போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூஜா லோகேஷ். பெரும்பாலும் நெகட்டிவ் ரோல்களில் நடித்துள்ள பூஜா கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரைக்கு பிரேக் கொடுத்திருந்தார். பெங்களூருவில் வசிக்கும் பூஜா ஜீ கன்னடாவில் ஸ்டைலிஸ்ட் கன்சல்டன்ட்டாக வேலை பார்த்து வருகிறார்.

    இதையும் படிங்க.. எனக்கு எல்லாம் தெரியும்.. கோபிக்கு ஷாக் கொடுத்த பாக்கியா மகன் செழியன்!

    இந்நிலையில் கலர்ஸ் தமிழ் சேனலில் விரைவில் டெலிகாஸ்ட்டாக உள்ள புத்தம் புதிய சீரியல் மூலம் மீண்டும் தமிழ் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாவில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ள நடிகை பூஜா, மீண்டும் கேமரா முன் வருகிறேன். நான் மிகவும் விரும்பும் தமிழ் சின்னத்திரையில் நடிக்கிறேன். இதற்காக நடிகை குஷ்புவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். கடந்த 7 ஆண்டுகளில் பல விஷயங்கள் மாறிவிட்டன. தற்போது உங்கள் அனைவரின் ஆதரவைஎதிர்பார்க்கிறேன். நிச்சயம் நீங்கள் என்னை வெறுப்பீர்கள்' என கூறியிருக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Pooja Lokesh (@shilpoo)






    கலர்ஸ் தமிழ் சேனலில் வரும் மார்ச் 28 முதல் நடிகை குஷ்பூ நடிக்கும் மீரா என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. சமீபத்தில் கூட இதற்கான ப்ரமோ வெளியானது. இந்த சீரியலில் தான் தற்போது ரீ-என்ட்ரி கொடுத்து இருக்கிறார் நடிகை பூஜா. நிச்சயம் என்னை நீங்கள் வெறுப்பீர்கள் என்று பூஜா குறிப்பிட்டிருப்பதன் மூலம் வழக்கம் போல இந்த சீரியலிலும் நெகட்டிவ் கேரக்டரில் தான் நடிக்க போகிறார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Sun TV, TV Serial

    அடுத்த செய்தி