Home /News /entertainment /

இது த்ரிஷாவுக்கு தெரியுமா? ’பொன்னியின் செல்வன்’ குந்தவை போல் மாறிய பிக் பாஸ் ஸ்ருதி!

இது த்ரிஷாவுக்கு தெரியுமா? ’பொன்னியின் செல்வன்’ குந்தவை போல் மாறிய பிக் பாஸ் ஸ்ருதி!

பிக் பாஸ் ஸ்ருதி

பிக் பாஸ் ஸ்ருதி

ஸ்ருதி இந்த ஃபோட்டோக்களை த்ரிஷாவுக்கு இன்ஸ்டாவில் டேக் செய்துள்ளார்.

    பிக் பாஸ் சீசன் 5 புகழ் ஸ்ருதி பெரியசாமி, பொன்னியின் செல்வன் குந்தவை தோற்றத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த ஆண்டு மிகப் பெரிய எதிர்பார்ப்பை எற்படுத்தி இருக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இயக்குனர் மணிரத்னம் இயக்கி இருக்கும் இந்த படத்தில் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பிரம்மாண்டத்தின் உச்சமாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இந்தாண்டு வெளியாகிறது. ஏற்கெனவே இதன் டீசர் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் அறிமுகங்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. எவர்கிரீன் அழகியான த்ரிஷாவை ரசிகர்கள் கொண்டாடினர்.

    குக் வித் கோமாளி கனியை தேடி போகும் பிரம்மாண்ட வாய்ப்பு?

    எல்லா சோஷியல் மீடியா பக்கத்திலும் குந்தவை த்ரிஷா புகைப்படங்கள் அதிகம், லைக், ஷேர் செய்யப்பட்டன.இந்நிலையில் த்ரிஷாவின் குந்தவை மேக்கப் லுக்கில் இன்ஸ்பயர் ஆகி பிக் பாஸ் சீசன் 5 பிரபலம்  ஸ்ருதி பெரியசாமி ஒரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளார்.




    அவர் குந்தவை த்ரிஷா போல் உடை, அணிகலன் அணிந்து வித்தியாசமான ஃபோட்டோ ஷூட் ஒன்று நடத்தியுள்ளார். கிட்டத்தட்ட பொன்னியின் செல்வன் டீசரில் காட்டப்பட்ட குந்தவையை கண்முன் நிறுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ஸ்ருதி தனது  இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.




    காரைக்குடி பெண்ணான ஸ்ருதி அழகிய தமிழ் முகம் கொண்டவர். மாடலிங் துறையில் பிரபலமான இவருக்கு கடந்த பிக் பாஸ் சீசன் 5ல் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் ஸ்ருதி கலந்து கொண்டார். இந்த குந்தவை லுக் மேக்கப்பில் ஸ்ருதி அழகில் ஜொலிக்கிறார். அதுமட்டுமில்லை இந்த ஃபோட்டோக்களை த்ரிஷாவுக்கு இன்ஸ்டாவில் டேக் செய்துள்ளார். ரசிகர்கள் ஸ்ருதியின் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லை சிலர், வழக்கம் போல் சில நெகட்டிவான கமெண்டுகளையும் பதிவு செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Actress Trisha, Bigg Boss Tamil, Ponniyin selvan, Vijay tv

    அடுத்த செய்தி