வானத்தை போல சீரியலில் வில்லி ரோலுக்கு மாறிவிட்டார் பொன்னி. தன்னை ஏமாற்றி நடத்திய கல்யாணத்தை ஏற்றுக் கொண்டு சின்ராசுவுடன் பொன்னி வாழ்வதாக இல்லை.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் வானத்தை போல சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிப்பரப்பாகி வருகிறது. 1 வார திருமண எபிசோடு ஒருவழியாக முடிவுக்கு வந்தது. கடைசியில் சரவணன் ஜெயிலுக்கு போக பொன்னி கழுத்தில் சின்ராசு தாலி கட்டி விட்டார். இதனால் சின்ராசு - சந்தியா காதல் பிரிகிறது. இதற்கு ராஜபாண்டி தான் காரணம். கடைசி நேரத்தில் சரவணனை மிரட்டி கத்தி முனையில் பொன்னியின் கழுத்தில் சின்ராசுவை தாலி கட்ட வைக்கிறார். அதன் பின்பு நடந்த சண்டையில் கத்தி குத்துப்பட்டு ராஜபாண்டி ஆஸ்பிட்டலில் இருக்கிறார். துளசி உடைந்து போய் விட்டார்.
கணவருக்காக ஆல்யா மானசா செய்த செயல்.. சஞ்சீவ் கொடுத்து வச்சவரு!
பின்பு சின்ராசு ரத்தம் கொடுத்து ராஜபாண்டி உயிரை காப்பாற்றி விட்டார். கடைசி வரை திருமணம் நடக்கும் என காத்துக் கொண்டிருந்த சத்யா அசிங்கப்பட்டு அங்கிருந்து கிளம்பினார். ஆனால் பொன்னி இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொள்வதாக இல்லை. திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்திலே கல்யாண
புடவையை எரித்து அனைவருக்கும் பயத்தை காட்டினார். அதனைத்தொடர்ந்து வீட்டுக்கு வரும் பொன்னி இடதுகாலை எடுத்து வைத்து புகுந்த வீட்டுக்கு வருகிறார்.
கணவர் குறித்து முதன் முதலாக பேசிய விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா! விவாகரத்து வதந்தி உண்மையா?
வந்த முதல் நாளே பிரச்சனை வெடிக்கிறது. பால் பழம் சாப்பிட கொடுத்தால் அதை தூக்கி அடிக்கிறார். பொன்னியின் கோபம் சின்ராசுக்கு புரிந்து அமைதியாக செல்கிறார். அதுமட்டுமில்லை இனிமேல் பொன்னி, சின்ராசு - துளசியை பிரிக்கும் வில்லியாக மாறி சீரியலில் ட்விஸ்ட் கொடுக்க இருக்கிறார். இதனால் வானத்தை போல சீரியல் வரும் நாட்களில் எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
இவ்வளவு நாட்களாக பொன்னி ரோலில் நடித்து வந்த பிரீத்தி குமார் தற்போது வானத்தை போல சீரியலில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதில் ஈரமான ரோஜாவே சாந்தினி பொன்னியாக நடிக்கவுள்ளார். நேற்றைய எபிசோடில் இருந்து அவரின் அறிமுகம் தொடங்கியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.