ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Pongal movies : டிவி சேனல்களில் வரிசைக்கட்டி நிற்கும் புதுப்படங்கள்!

Pongal movies : டிவி சேனல்களில் வரிசைக்கட்டி நிற்கும் புதுப்படங்கள்!

பொங்கல் படங்கள்

பொங்கல் படங்கள்

Pongal : சன் டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் புத்தம் புதிய படங்களை ஒளிப்பரப்புகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பண்டிகை நாட்கள் என்றாலே டிவி சேனல்களில் சிறப்பு திரைப்படங்கள், பட்டிமன்றங்கள், ரியாலிட்டி ஷோக்கள் களைக்கட்ட தொடங்கி விடும். எந்த பண்டிகை கொண்டாட்டமாக இருந்தாலும் மக்களை மேலும் உற்சாகமாக வைத்திருப்பது சின்னத்திரை டிவி சேனல்கள் தான். பண்டிகை நாட்களில் காலை துவங்கி இரவு வரை எண்ணற்ற நிகழ்ச்சிகளை டெலிகாஸ்ட் செய்யப்படுவது வழக்கம். முக்கியமாக அனைத்து தமிழ் முன்னணி சேனல்களிலும் திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்படுவதும் வழக்கம்.

எனவே பண்டிகை நாட்களில் எந்தெந்த சேனல்களில் என்னென்ன புதிய திரைப்படங்கள் போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கும். இந்த பொங்கல் பண்டிகைக்கு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகவில்லை. எல்லா வருடமும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அஜித் விஜய், ரஜினி, சூர்யா , தனுஷ் போன்ற உச்ச நட்சத்திரங்களில் படங்கள் வெளியாகும். ஆனால் கடந்த 2 வருடமாக கொரோனா, லாக்டவுன் போன்ற காரணத்தினால் திரையரங்குகளில் அந்த கொண்ட்டாட்டங்களை காண முடியவில்லை. இருப்பினும் சின்னத்திரையில் போடும் புதுப்படங்களை பார்த்து மனசை தேற்றி கொள்ள வேண்டியது தான். அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு முன்னணி சேன்ல்களில் என்னென்ன புதுப்படங்கள் ஒளிப்பரப்பாகுகின்றன என பார்க்கலாம்.
 
View this post on Instagram

 

A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)பொங்கலுக்கு புதிய திரைப்படங்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சன் டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் புத்தம் புதிய படங்களை ஒளிப்பரப்புகின்றன.

இதையும் படிங்க..குடும்பத்துடன் திருப்பதி போன பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.. பக்தர்களுக்கு சொன்ன அந்த ரகசிய இடம்!

சன் டிவி : சண்டக்கோழி 2, பட்டாஸ், அண்ணாத்த, பிரியாணி இந்த 4 படங்கள் இன்று (ஜன 14) தைப் பொங்கல் சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்புகின்றன.

கலைஞர் டிவி : அரண்மனை 3

கலர்ஸ் தமிழ்: கோடியில் ஒருவன்

விஜய் டிவி : அன்பெல் சேதுபதி

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Pongal, Sun TV, Vijay tv