ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இணையத்தில் பரவியது ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் ஆபாச படங்கள் - கல்லூரி மாணவர் கைது!

இணையத்தில் பரவியது ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் ஆபாச படங்கள் - கல்லூரி மாணவர் கைது!

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

பிரவீனா தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வரும் பிரவீனா, கடந்தாண்டு சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜா ராணி 2 சீரியல் நடிகையில் மார்பிங் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த கல்லூரி மாணவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை பிரவீனா 1992 ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

தமிழ் சீரியல்களில் நடித்து வந்தவர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சாமி 2, கோமாளி, டெடி உள்ளிட்ட தமிழ்படங்களில் நடித்துள்ள இவர் சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருதையும், சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

பிரவீனா தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வரும் பிரவீனா, கடந்தாண்டு சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், சிலர் தனது ஃபோட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் இறங்கிய சைபர் கிரைம் போலீசார், தமிழகத்தைச் பாக்யராஜ் என்பவரை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

சில மாதங்கள் சிறையில் இருந்த அவர், ஜாமீனில் வெளியே வந்துவிட்டதாகத் தெரிகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரவீனா மட்டுமின்றி அவரது மகளின் புகைப்படங்களையும் ஆபாசமாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் போலியான ஐடிக்களில் மீண்டும் புகைப்படங்கள் வெளியானது.

நண்பர்கள் மூலம் இதனை அறிந்த அதிர்ச்யிடைந்த பிரவீனா தனது மகளுடன் சென்று கேரள சைபர் கிரைமில் மீண்டும் புகார் அளித்தார். சிறையிலிருந்து வெளிவந்த அந்த நபர் தன்னை பழிவாங்கும் நோக்கில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தனது போட்டோக்களையும் தனது மகள், அம்மா, மற்றும் சகோதரியின் போட்டோக்களையும் ஆபாசமாக சித்தரித்து தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

வக்கிரமான மன நோயாளியாக மாறியிருக்கும் அந்த நபரை பிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் கேட்டுக் கொண்டார்.

புகாரின் பேரில் ஆபாசப் படங்களை தொடர்ந்து பதிவேற்றி வந்த பாக்யராஜை கேரள போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். 22 வயதே ஆன பாக்யராஜ் கல்லூரி மாணவன் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Also read... டிக்கெட் டூ ஃபினாலே 8-வது டாஸ்க்... யார் யாருடன் போட்டியிடுவது... முட்டிக்கொள்ளும் பிக்பாஸ் ஹவுஸ்மெட்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Crime News, TV Serial