ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் பிஸ்தா!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் பிஸ்தா!

பிஸ்தா

பிஸ்தா

கும்பகோணத்தில் உள்ள கிராமப்புற சூழலை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் ஃபன் மற்றும் நகைச்சுவையாக இருக்கும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக

ஃபன் கலந்த நகைச்சுவை திரைப்படமான பிஸ்தா திரைப்படத்தை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்.

வயாகாம்18 நிறுவனத்தின் தமிழ் என்டர்டெயின்மென்ட் சேனலான கலர்ஸ் தமிழ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் வளையல் மேளாவுடன் இணைந்து, திருமணங்கள், கேளிக்கைகள் மற்றும் குழப்பங்கள் நிறைந்த பிஸ்தா திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த ஞாயிறு, நவம்பர் 18 ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு கண்டு மகிழ தயாராகுங்கள்.

திருமணங்களை நிறுத்துவதை முழு நேர வேலையாக செய்யும் கதாநாயகன் சரவணனை சுற்றி கதை முழுதும் நகர்கிறது. அதனால் கடைசியில் அவர் தனது சொந்த திருமணத்தில் மணமகள் இல்லாமல் இருக்கும்போது என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் இறுதி திருப்பமாகும். நவம்பர் 18, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணிக்கு காதல் மற்றும் நகைச்சுவை கலந்த பயணத்தைக் காண, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள்.

M.ரமேஷ் பாரதி இயக்கிய இத்திரைப்படத்தில், நடிகர் ஷிரிஷ் சரவணன், நடிகை மிருதுளா முரளி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், நடிகர் யோகி பாபு, நடிகர் சதீஷ், நடிகர் சுவாமிநாதன் மற்றும் நடிகர் பாவா லட்சுமணன் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். "அழகுல ராசாத்தி" பாடலைப் பாடியுள்ள யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இசையமைப்பாளர் தரனின் இசையமைப்பு படத்தின் சாராம்சத்தை அதிகரிக்கும்.

விஜய் தான் நம்பர் 1... வாரிசு தயாரிப்பாளர் பேச்சால் எழுந்த சர்ச்சை!

கும்பகோணத்தில் உள்ள கிராமப்புற சூழலை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம், ஒரு மகிழ்ச்சியான கிராமவாசியான சரவணன் (ஷிரிஷ் சரவணன்), அவர் தனது நண்பர்களான சதீஷ் (சதீஷ்) மற்றும் மார்க் பாபு (யோகி பாபு) ஆகியோருடன் சேர்ந்து, மணமகள் மற்றும் மணமகனின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் பெரும்பாலான திருமணங்களில் சலசலப்பை உருவாக்கி, "திருமணத்தை நிறுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தனது நாடகங்கள் மூலம் கிராமங்களுக்கு கல்வி கற்பிக்க பாடுபடும் ஒரு நாடகக் கலைஞரான செல்வி (மிருதுளா முரளி) மீது தீரா காதலில் விழுகிறார் சரவணன். ஒரு கட்டத்தில் ​​அவர் தனது தொழிலுக்காக பிரச்சினையில் சிக்கி, சிறையில் அடைக்கப்படுகிறார், அப்போது அவர் ஒரு சூழ்நிலையில் தனது வாழ்க்கையை ஒரு திருமண நிறுத்துபவராகவோ அல்லது அவர் வாழ்க்கையின் காதலையோ ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும், சரவணன் எதைத் தேர்வு செய்கிறார் என்பது கதையின் மீதி சுவாரஸ்யமான இறுதியாகும்.

இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி பிரீமியர் குறித்து இயக்குநர் எம். ரமேஷ் பாரதி பேசுகையில், “ பிஸ்தா திரைப்படம் திருமணத்தை நிறுத்துபவர்களைக் காணக்கூடிய கருத்துடன் கூடிய தனித்துவமான படம் ஆகும். பெரும்பாலான திரைப்படங்கள் பொதுவாக திருமண திட்டமிடுபவர்கள் மற்றும் தனித்துவமான திருமணங்களைத் திட்டமிடும் நபர்களைக் கொண்டுவருகின்றன, ஆனால் ஒரு வேடிக்கையான அம்சத்தை எதிர்பாரா திருப்பத்துடன் உருவாக்குவதே எனது யோசனையாக இருந்தது, எனவே நாங்கள் கருத்தை மாற்றியமைத்தோம். சதீஷ், யோகி பாபு மற்றும் சுவாமிநாதன் போன்ற சிறந்த நடிகர்களுடன் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு நகைச்சுவையான அனுபவமாக இருந்தது. மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் இந்த வார இறுதியில் பிஸ்தா திரைப்படத்தை அனைவரும் கண்டு மகிழுங்கள்.

இது குறித்து நடிகர் ஷிரிஷ் சரவணன் கூறுகையில், “தமிழ் திரையுலகில் இது எனது மூன்றாவது படம், கலர்ஸ் தமிழில் பிஸ்தாவின் பிரீமியர் காட்சி மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இதைப் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விருப்பமில்லாத திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சித்தாந்தத்தின் புத்திசாலித்தனம் மற்றும் மகிழ்ச்சியுடன், வரும் ஞாயிற்றுக்கிழமை தங்கள் அன்புக்குரியவர்களுடன் இருந்து சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு இந்த திரைப்படபம் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் என்றார்.

உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக பிஸ்தா திரைப்படத்தை கலர்ஸ் தமிழில் இந்த ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு காணுங்கள். சன் டைரக்ட் (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), மற்றும் Videocon D2H (CHN NO 553)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்