ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பெண் சுதந்திரத்தை அனுபவிக்கணும்... பெரியார் சிந்தனைகளைப் பேசிய இனியா சீரியல் - வரவேற்கும் நெட்டிசன்கள்!

பெண் சுதந்திரத்தை அனுபவிக்கணும்... பெரியார் சிந்தனைகளைப் பேசிய இனியா சீரியல் - வரவேற்கும் நெட்டிசன்கள்!

இனியா சீரியல்

இனியா சீரியல்

உங்க புத்தகத்தை எல்லாம் படிச்சிருந்தா இந்தாளுக்கு அடிமையா எல்லாம் நான் இருந்திருக்க மாட்டேனோ என்னவோ?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் பெரியார் சிந்தனைகள் இடம்பெற்றிருப்பது வரவேற்பைப் பெற்று வருகிறது.

சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. குறிப்பாக சீரியல்களில் காட்சிப்படுத்தப்படும் விஷயங்கள் எளிதில் பெண்களை சென்றடைகின்றன. குடும்பத்தார் சொல்லியும் கேட்காத பல விஷயங்களை, சீரியலைப் பார்த்து மாற்றிக் கொள்ளும் வண்ணம் சின்னத்திரையின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அப்படியான ஒரு விஷயம் தான் சன் டிவி-யின் இனியா சிரியலில் நடந்திருக்கிறது.

மானாட மயிலாட, ராஜா ராணி போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளால் ரசிகர்களின் மனதில் தனக்கென ஓரிடம் பிடித்தவர் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த அவர், இரண்டாவது முறை கர்ப்பமானதையடுத்து அந்த சீரியலில் இருந்து விலகினார். சிறு இடைவெளிக்குப் பிறகு இனியா சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார்.

இனியா சீரியலில் நடிகை பிரவீனா கோயிலுக்கு போவதை மறந்து விட்டதால், முழு தேங்காயுடன் எப்படி வீட்டுக்கு திரும்புவது என யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அங்கு நிற்கும் ஆட்டோவில் பெரியாரின் படம் ஒட்டப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர், தேங்காயை அங்கிருந்த கல்லில் உடைத்து கூடையில் வைத்து விட்டு, பத்தியை கொளுத்தி பெரியாருக்கே சுற்று, அவரை வணங்குகிறார். “ஐயா பெரியவரே, பெரியாரே... உங்க புத்தகத்தை எல்லாம் நான் படிச்சதில்ல, ஆனா காத்துவாக்குல அப்பப்போ ரேடியோவுல கேட்டுட்டு தான் இருக்கேன். பொம்பளைங்க அடிமையா இருக்குறத பத்தி அப்போவே பேசின ஆளாமே நீங்க. அதுவும் ஒரு ஆம்பிளையா இருந்துட்டு, இதைப்பத்தி பேசுறதுக்கு ஒரு மனசு வேணும். அதனால தான் உங்கள எல்லாரும் பெரியார் பெரியார்ன்னு சொல்றாங்க போலருக்கு. உங்க புத்தகத்தை எல்லாம் படிச்சிருந்தா இந்தாளுக்கு அடிமையா எல்லாம் நான் இருந்திருக்க மாட்டேனோ என்னவோ, சரி போனதெல்லாம் போகட்டும், இனியாவது நான் உங்க புத்தகத்தையெல்லாம் படிக்கிறேன். பொம்பளைங்க அடுப்ப விட்டு வெளில வரணும். வெளில வந்து சுதந்திரம்ன்னா என்னான்னு அனுபவித்து பார்க்கணும்” என பேசிக்கொண்டே போகிறார் பிரவீனா.

பரபரனு ஓடுதா? போர் அடிக்குதா? எப்படி இருக்கு லத்தி திரைப்படம்? ட்விட்டர் ரிவியூ இதோ!

இதுவரை எந்த சீரியல்களிலும் பெரியாரை பற்றி இத்தனை விரிவாக பேசியது இல்லை என்பதால், முற்போக்காளர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது இனியா சீரியலின் இந்த காட்சி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV, TV Serial