ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பேரன்பு சீரியலில் படையப்பா படக்காட்சி! - ட்ரெண்டான வீடியோ

பேரன்பு சீரியலில் படையப்பா படக்காட்சி! - ட்ரெண்டான வீடியோ

பேரன்பு சீரியல்

பேரன்பு சீரியல்

Peranbu serial முந்தைய காட்சியில் ஆர்த்தி நாயகியிடம் என் மாமியார் வீட்டில் வேலை செய்யும் வாட்ச் மேன் அல்லது வேலைக்காரரை உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் நாயகி மனமுடைந்து போகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு சீரியலின் கதை விறுவிறுப்பாக  நகர்கிறது. நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் நாயகனுக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் வைஷ்ணவி. பேரன்பு என்னும் சீரியல் மூலம் ஜீ தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

நாயகனாக விஜய் வெங்கடேசன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் 'ஊர் வம்பு’ லட்சுமி, அக்‌ஷிதா அஷோகன், 'மெளன ராகம்’ சீரியலில் வில்லியாக மிரட்டிய ஷமிதா ஆகியோர் நடிக்கின்றனர். இருபது எபிசோடுகள் கடந்துள்ள நிலையில், சீரியலின் கதை சற்று விறுவிறுப்பாக உள்ளது.

ஆதரவற்ற பெண்ணாக, நாயகன் வீட்டில் உதவி செய்யும் பெண்ணாக இருக்கிறார் நாயகி வானதி.  நாயகன் அம்மா ராஜராஜேஸ்வரிக்கு வானதி என்றால் கொள்ளை பிரியம்.

நாயகன் கார்த்திக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் வைக்க வேண்டும் என்று ராஜ ராஜேஸ்வரி முடிவெடுக்கிறார். ஆர்த்தி, கார்த்திக்கை மணமுடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.  ராஜராஜேஸ்வரிக்கு ஆர்த்தி மீது ஈடுபாடு இல்லை. ஆனால் சந்தர்ப்ப சூழலால் திருமணத்துக்கு சம்மதிக்கிறார்.

' isDesktop="true" id="659993" youtubeid="2JZ3UbzlTKE" category="television">

தற்போது வெளியாகியுள்ள பேரன்பு சீரியல் ப்ரோமோவில், ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சி வந்துவிட்டது. ராஜ ராஜேஸ்வரி தாம்புல தட்டு ஆர்த்தியின் பெற்றோரிடம் கொடுக்காமல், நாயகி வானதியிடம் கொடுக்கிறார்.

அதற்கு முந்தைய காட்சியில் ஆர்த்தி நாயகியிடம் என் மாமியார் வீட்டில் வேலை செய்யும் வாட்ச் மேன் அல்லது வேலைக்காரரை உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

இதனால் நாயகி மனமுடைந்து போகிறார். இந்நிலையில் ராஜராஜேஸ்வரி நிச்சயதார்த்த தட்டை வானதியின் கையில் கொடுப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த காட்சி படையப்பா படக் காட்சி ஒன்றை நினைவுப்படுத்துகிறது. நீலாம்பரி பெற்றோரிடம் கொடுக்க வேண்டிய தாம்பூல தட்டை வேலைக்கார பெண்ணான வசுந்தராவின் அம்மாவிடம் கொடுப்பார். இந்த காட்சிதான் படத்தின் ஹைலைட்டான காட்சி. பேரன்பு சீரியலிலும் அதே காட்சியை வைத்திருக்கிறார் இயக்குநர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, TV Serial Promos, Zee tamil, Zee Tamil Tv