Home /News /entertainment /

அமீர் சொன்ன வார்த்தையால் தலையில் அடித்துக் கொண்ட பிக் பாஸ் பாவ்னி!

அமீர் சொன்ன வார்த்தையால் தலையில் அடித்துக் கொண்ட பிக் பாஸ் பாவ்னி!

பாவ்னி - அமீர்

பாவ்னி - அமீர்

இந்த ஜோடி காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வரும் நிலையில் பாவ்னியின் இந்த பதிவு சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்தியுள்ளது.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன பாவ்னிக்கு யாரும் எதிர்பார்க்காத ரிப்ளை கொடுத்துள்ளார் அமீர். இன்ஸ்டாவில்  பாவ்னி வெளியிட்ட இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பிக் பாஸ் பாவ்னி ரெட்டி அமீருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அதன் மூலம் அமீருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதுமட்டுமில்லை அந்த போஸ்டில் ”ஐ லவ் யூ டா” என்ற வார்த்தையையும் பாவ்னி குறிப்பிட்டு இருப்பது இணையத்தில் பெரிய விவாதத்தையே எற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த ஜோடி காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வரும் நிலையில் பாவ்னியின் இந்த பதிவு சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்தியுள்ளது.

    அவருக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சு.. சர்ச்சைக்கு பதில் சொன்ன பிக் பாஸ் இசைவாணி!

    நேற்றைய தினம் அமீர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிக் பாஸ் நண்பர்கள், சினிமா பிரபலங்கள், பிபி ஜோடி போட்டியாளர்கள் அனைவரும் இணையத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்து இருந்தனர். அதுமட்டுமில்லை பிரியங்கா, நிரூப், அபிஷேக் ராஜா ஆகியோர் சேர்ந்து அமீருக்கு கேக் கட்டிங் சர்ப்ரைஸூம் தந்து இருந்தனர். இந்த புகைப்படங்கள், வீடியோக்களை அமீர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து அனைவருக்கும் நன்றி கூறி இருந்தார்.

    பிக் பாஸ் ஓவியாவின் திடீர் முடிவு.. ரசிகர்கள் செம்ம ஹேப்பி!

    இந்த நேரத்தில் அனைவரும் பாவ்னியின் பதிவுக்காக காத்திருந்தனர். கடைசியில் பாவ்னி அமீருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து அதில் பல உணர்வுப்பூர்வமான விஷயங்களை கேப்ஷனாக குறிப்பிட்டு இருந்தார். “என் வாழ்வில் வந்ததற்கு மிகவும் நன்றி. தங்கமான இதயம் கொண்ட மனிதன். எல்லா நேரத்திலும் என்னுடன் இருந்ததற்கு மிகப் பெரிய நன்றி அமீர். எப்போதுமே மற்றவர்களுக்கு நல்லதே நினைக்கும் நல்லதே கொடுக்கும் உள்ளம் கொண்ட நபர். இந்த  பூமியில் நீ ஆசைப்பட்ட எல்லாமே உனக்கு கிடைக்க கடவுளை வேண்டுகிறேன். ஐ லவ் யூ டா ஹேப்பி பர்த்டே அமீர்” என குறிப்பிட்டுள்ளார்.




     




    View this post on Instagram





     

    A post shared by Pavni (@pavani9_reddy)






    பாவ்னியின் இந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் ஒருவழியாக பாவ்னி அந்த விஷயத்தை உறுதி  செய்து விட்டர் என கொண்டாடி வருகின்றனர். இதற்கு அமீர் என்ன சொல்வார் என ஆவலுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, அமீர் “நன்றி பவானி” என கூறி இருக்கிறார். பிக்  பாஸ் ஷோவில்  பாவ்னி என கூறாமல் அவரை எப்போதுமே பவானி என்று தான் அமீர் அழைப்பார். அதை நினைவில் கொண்டு அமீர் போஸ்டிலும் அதை கமெண்டாக பதிவு செய்துள்ளார். அதற்கு பாவ்னி தலையில் அடித்துக் கொள்ளும் எமோஜியை போட்டு பாவ்னி என்று ரிப்ளை செய்து இருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Television, Vijay tv

    அடுத்த செய்தி