Home /News /entertainment /

மீண்டும் ரசிகர்களை குழப்பும் அமீர் -பாவ்னி.. அந்த ஃபோட்டோவுக்கு பின்னாடி ஒரு கதையே இருக்கு!

மீண்டும் ரசிகர்களை குழப்பும் அமீர் -பாவ்னி.. அந்த ஃபோட்டோவுக்கு பின்னாடி ஒரு கதையே இருக்கு!

பாவ்னி - அமீர்

பாவ்னி - அமீர்

வைல்டு கார்டு மூலம் வந்த அமீர், பாவ்னியுடன் பிக்பாஸ் வீட்டில் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் கிசுகிசுவாக உருவெடுத்தது.

  சின்னத்திரை ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையில் தமிழ் டிவி சேனல்கள் பல வித்தியாசமான மற்றும் சுவாரசியமான நிகழ்ச்சிகளை தயாரித்து டெலிகாஸ்ட் செய்து வருகின்றன. அந்த வகையில் எந்த நிகழ்ச்சியையும் வித்தியாசமாகவே ஒளிபரப்பி கோடிக்கணக்கான தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து இருக்கிறது ஸ்டார் விஜய் டிவி. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் எண்ணற்ற சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்தியில் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்து நிற்கிறது பிக்பாஸ்.

  2017 துவங்கி கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சண்டைகள், சச்சரவுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு பெயர் போன ஷோவாக இருந்து வருகிறது. போட்டியாளர்களிடையே நடக்கும் குடுமிப்பிடி சண்டையாகட்டும், கட்டிபிடிக்கும் ரொமான்ஸ் ஆகட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு வைரலாகி வருகிறது. கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி துவங்கி ஜனவரி 16-ஆம் தேதி வரை பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

  இதையும் படிங்க... முன்னாள் காதலி பற்றி நாமினேஷனில் ஓபனாக பேசிய நிரூப் நந்தகுமார்!

  இதில் இசை வாணி, ராஜு, மதுமிதா, பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, மலேசிய தமிழ் பெண் நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் - சாவித்திரி ஆகியோரது பேரன் அபிநய், அக்‌ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவ்னி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 18 பேர் நேரடி போட்டியாளர்களாக இருந்தார்கள்.

  இதையும் படிங்க,.. தமிழ் - சரஸ்வதி கல்யாணம் நடக்குமா? மொத்த குடும்பத்திற்கும் உண்மை தெரிந்தது!

  அமீர் மற்றும் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் பிரபல சீரியல் நடிகருமான சஞ்சீவ் ஆகியோர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் போட்டியாளர்களாக நுழைந்தனர். இந்த சீசனில் சர்ச்சைக்குரிய விஷயமாக முதலில் அபிநய் - பாவ்னி லவ் மேட்டர் இருந்தது. ஆனால் அபிநய் இதை மறுத்தார். பின்னர் வைல்டு கார்டு மூலம் வந்த அமீர், பாவ்னியுடன் பிக்பாஸ் வீட்டில் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் கிசுகிசுவாக உருவெடுத்தது. பின் பாவ்னியை காதலிப்பதாக கூறிய அமீர் பின் ஒருசமயம் பேசி கொண்டிருக்கும் போதே அவருக்கு முத்தம் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.   
  View this post on Instagram

   

  A post shared by Amir🧿Pavni (@pavmirxcreations)


  இதனால் இவர்கள் இருவரும் காதலர்கள் என்றே கிசுகிசுக்கப்பட்டார்கள். ஆனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அமீர்-பாவ்னி இருவருமே நாங்கள் நல்ல நண்பர்கள் என்றே தான் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்நிலையில் பாவ்னி மற்றும் அமீர் இருவரும் வெளியே ஒன்றாக சென்றுள்ள ஃபோட்டோ ஒன்று தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. இந்த ஃபோட்டோவை பாவ்னி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்து இருக்கிறார். இதனை பார்க்கும் ரசிகர்கள் இப்போவாவது சொல்லுங்கள் நீங்கள் இருவரும் காதலர்களா அல்லது நண்பரகளா என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி