Home /News /entertainment /

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே ஐதராபாத் கிளம்பிய பாவ்னி.. அவரே சொன்ன உண்மையான காரணம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே ஐதராபாத் கிளம்பிய பாவ்னி.. அவரே சொன்ன உண்மையான காரணம்!

பிக் பாஸ் பாவ்னி

பிக் பாஸ் பாவ்னி

அடுத்தடுத்து காதல் கிசுகிசுக்களில் சிக்கியிருந்தாலும் பாவனிக்கு இருந்த ரசிகர்கள் பட்டாளம் மட்டும் குறையவில்லை.

  ரசிகர்களின் பேராதரவோடு ஒளிபரப்பட்டு வந்த பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் நிறைவடைந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கிய 5வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் , சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஆரம்பத்தில், இந்த சீசனுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பின்னர் விதவிதமான டாஸ்குகள் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்தது. மேலும், இந்த சீசன் ஆரம்பமான தொடக்கத்தில் பவானிக்கும், அக்ஷராவுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்கத் தொடங்கியது. அதேபோல, ஒவ்வொரு சீசனிலும் ஒரு லவ் ட்ராக் ஓடும். ஆனால் இந்த சீசனில் அப்படி எதுவும் இல்லையே என ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென பாவ்னி மற்றும் அபிநய் விவகாரம் வெடிக்கத் தொடங்கியது.

  ஆனாலும், இருவருக்குள்ளும் காதல் இல்லை என தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வந்ததால் அந்த சர்ச்சை குறைத்தொடங்கியது. பாவனியும் அபிநய்-யும் எப்போதும் போல நெருங்கிய நண்பர்களாகவே பழகி வந்தனர். பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரியில் அமீர் வீட்டுற்குள் நுழைத்தார். அமீர் வந்த பின்னர் பாவ்னி அபிநயிடம் இருந்து விலகி அமீருடன் ஒட்டிக்கொண்டார். இதுவும் சற்று சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. அடுத்தடுத்து காதல் கிசுகிசுக்களில் சிக்கியிருந்தாலும் பாவனிக்கு இருந்த ரசிகர்கள் பட்டாளம் மட்டும் குறையவில்லை. ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு வந்தார். பின்னர் 100 நாட்களை கடந்து டாப் 5 பைனலிஸ்ட்களில் ஒருவராக இடம்பிடித்தார் பாவ்னி.

  இதையும் படிங்க.. உங்கள் கண்கள் செமயா இருக்கு… பிக் பாஸ் ராஜுவை பாராட்டிய விஜய்!

  இறுதியில் மூன்றாவது போட்டியாளராக இடம்பிடித்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை தந்தது. நான்காவது இடத்தில் இருந்த பாவ்னிக்கு கடைசி வாரத்தில் அதிகமானவர்கள் வாக்களித்தால் அவர் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். இந்த சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்வு செய்யப்பட்டார்.  நிகழ்ச்சி முடிந்த பிறகு பிக்பாஸ் போட்டியாளர்கள் லைவ் சாட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தனர்.

  இதையும் படிங்க.. எல்லை மீறும் மீனாவின் வார்த்தைகள்… ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

  இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களிடம் பாவ்னி பேசியுள்ளார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் வெளியிப்படையாக பதிலளித்தார். தனக்கு உடல்நிலை ஒத்துக் கொள்ளாததால் உடனடியாக ஐதராபாத் வந்து விட்டதாக கூறினார். உள்ளே இருக்கும் போது வெளியில் என்னை எப்படி பார்ப்பார்கள். எனக்கு மக்கள் ஆதரவு வழங்குவார்களா என குழப்பத்தில் இருந்தேன். ஆனால் வெளியில் வந்ததும் நீங்கள் கொடுத்த ஆதரவை பார்த்து அசந்து போய் விட்டேன் என்று கூறினார். அதேபோல பிக்பாஸ் ஓடிடி.,யில் பங்கேற்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.   
  View this post on Instagram

   

  A post shared by Pavni Reddy (@pavani9_reddy)


  தொடர்ந்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். அதில், ”அனைவரின் அன்பு, அக்கறை, ஆதரவுக்கு நன்றி. நான் இதை எதிர்பார்க்கவில்லை. எனக்கு யாரும் இல்லை என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு நிறைய பேர் கிடைத்துள்ளார்கள். நீங்கள் தான் எனது முக்கிய குடும்பம்” என நெகிழ்ச்சியாக பேசி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் அவரது வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி