முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஏன் இப்படி செஞ்சீங்க? பிக் பாஸ் பாவ்னியை கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

ஏன் இப்படி செஞ்சீங்க? பிக் பாஸ் பாவ்னியை கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

பிக் பாஸ் பாவ்னி

பிக் பாஸ் பாவ்னி

பாவ்னி லைவ் வருவது மட்டுமின்றி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஷேர் செய்தும் வருகிறார்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

ஹைதராபாத்தில் பிறந்த பாவ்னிக்கு தற்போது 33 வயதாகிறது. இவர் சின்னத்திரையில் 2012ம் ஆண்டு முதல் தன் பயணத்தை தொடங்கினார். அப்போது பாவ்னிக்கும் அவருடன் சீரியலில் நடித்த பிரதீப் குமார் என்பருக்கும் காதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இவர்களது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை, பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். 

ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மன கசப்புகள் காரணமாக பிரதீப் தற்கொலை செய்து உயிரிழந்தார். இதனால் மனஉளைச்சல் ஆன பாவ்னி சில மாதங்கள் எதுவுமே செய்யாமல் இருந்துள்ளார். பிறகு தமிழில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடிக்கத் தொடங்கினார். இந்த சீரியல் இவருக்கு வரவேற்பை பெற்றுத்தந்தது. மேலும் தெலுங்கு, மலையாளம், தமிழில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க.. பிக் பாஸ் 5ல் சம்பளமே வேண்டாம் என்ற போட்டியாளர்! ஆனாலும் கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

இந்நிலையில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பாவ்னிக்கு எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதேநேரத்தில் இவருக்கு பிரச்சனைகளும் வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிநயுடன் இவருக்கு காதல் என கிசுகிசுக்கப்பது. இதனால் கடுப்பான பாவ்னி அவ்வப்போது தனது கணவர் உயிருடன் இருந்திருந்தால் இந்த பேச்சுக்கள் வந்திருக்காது என புலம்புவதும் உண்டு. மேலும் ஒவ்வொரு வாரமும் பாவ்னி நாமினேட் ஆகும் நிலையில் அவரது ரசிகர்கள் ஓட்டு போட்டு காப்பாற்றியும் வந்தனர்.

இதையும் படிங்க.. குக் வித் கோமாளி சீசன் 3ல் இணைந்த சூப்பர் சிங்கர் பரத் பற்றி உலா வரும் கருத்துக்கள்! உண்மை என்ன?

இதனால் மிகவும் தைரியமாக இருந்த பாவ்னி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2வது ரன்னர் அப் ஆக வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த சில நாட்களிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது இன்ஸ்டாவில் லைவில் வரும் பாவ்னி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.
 
View this post on Instagram

 

A post shared by Pavni (@pavani9_reddy)சமீபத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இனி சினிமாவில் மட்டும் நடிக்க போவதாகவும், சீரியல்களில் நடிக்கும் பிளான் இல்லை என கூறினார். மேலும் உங்களது திருமணம் எப்போது என மற்றொரு ரசிகர் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த பாவ்னி, இனி என் வாழ்க்கையில் திருமணம் என்பதே இல்லை என்றும், தன்னுடைய முழு கவனமும் இனி நடிப்பில் மட்டும் தான் என தெரிவித்துள்ளார்.

லைவ் வருவது மட்டுமின்றி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஷேர் செய்தும் வருகிறார். சமீபத்தில் ஷேர் செய்யப்பட்ட வீடியோ ஒன்றில், பாவனி புது ஹேர் ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார். முடியை கலர் செய்து வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் சின்ன பெண் போல இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ  தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv