பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் ரீல் ஜோடிகளான பாவ்னி - அமீர் இப்போது பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி கலக்கி கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஏற்கெனவே காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வரும் நிலையில் பாவ்னியின் அக்கா, அமீர் பற்றி சில விஷயங்களை ஷேர் செய்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்பு அமீர்-பாவ்னி இருவருமே நாங்கள் நல்ல நண்பர்கள் என்று தொடர்ந்து கூறி வந்தனர். அதே போல் பிக் பாஸ் வீட்டில் வெடித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் இருவரும் தைரியமாக பதிலும் கூறி இருந்தனர். இந்நிலையில் பிபி ஜோடிகள் சீசன் 2வில் இருவரும் ரீல் ஜோடிகளாக களம் இறங்கினர். நடன நிகழ்ச்சியான இந்த போட்டியில் அமீர் - பாவ்னி ஜோடி பலரின் கவனத்தையும் பெற்றது.நாளுக்கு நாள் இவர்களின் நடனம் பாராட்டுக்களை பெற இருவருக்கும் இடையிலான நெருக்கமும் அதிகம் ஆனது.
கணவன் - மனைவி இனி ஒரே சேனலில்... ஷபானா - ஆர்யன் ஃபேன்ஸ் பயங்கர ஹேப்பி!
அந்த சமயத்தில் தான் அமீர் - பாவ்னி கேன்டில் லைட் டின்னர் வீடியோ வெளியாகி வைரலானது. ரசிகர்கள் அமீர்- பாவ்னியிடம் காதல் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பாவ்னி, அமீரை பிடிக்கும் மற்ற விஷயத்தை முடிவு எடுக்க அவகாசம் தேவைப்படுகிறது என போல்டாக பதில் அளித்தார். இந்நிலையில் இந்த வாரம் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகியுள்ளது.
அப்படி போடு! பிக் பாஸ் பிரியங்கா சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வைரல் தகவல்
இதில் பாவ்னியை பார்க்க சர்ப்பிரைஸாக என்ட்ரி கொடுக்கிறார் அவரின் அக்கா. அப்போது பேசி அவர் அமீர் குறித்து பல விஷயங்களை ஷேர் செய்கிறார். அதாவது “அமீர் தான் பாவ்னியை மாற்றி அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேச வைத்து அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வைத்தார். அதனால் தான் அமீர் - பாவ்னி உறவு இன்னும் பலமாக உள்ளது. எங்களுக்கும் அது மகிழ்ச்சியை தருகிறது. அதற்காக அமீருக்கு நன்றி சொல்கிறேன்” என்று கூறி வாட்ச் ஒன்றையும் அமீருக்கு கிஃப்ட் செய்கிறார்.
இதை பார்த்து ஷாக் ஆகும் பாவ்னி, அந்த வாட்சை வாங்கி அவரே தனது கையால் அமீருக்கு போட்டு விடுகிறார். இந்த புரமோ வீடியோவை பார்த்த அமீர் - பாவ்னி ரசிகர்கள் வழக்கம் போல் லைக்ஸ்களை தெறிக்க விடுகின்றனர். அதே போல் அமீருக்கு இந்த வார்த்தைகள் மிக மிக நெருக்கமானவை. காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீரை பற்றி பாவ்னியின் அக்கா தப்பாக புரிந்து கொண்டு அவரிடம் ஜாக்கிரதையாக இரு, விலகி இரு என பாவ்னிக்கு அட்வைஸ் செய்து இருந்தார். ஆனால் இன்று கதை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இதனால் அமீர் பயங்கர ஹாப்பி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv