Home /News /entertainment /

அமீர் - பாவ்னி பற்றி பரவும் அந்த வதந்தி உண்மையா?

அமீர் - பாவ்னி பற்றி பரவும் அந்த வதந்தி உண்மையா?

அமீர் - பாவ்னி

அமீர் - பாவ்னி

பாவ்னி, எனக்கு அமீரை பிடிக்கும் என ஓப்பனாக கூறி இருந்தார்.

    அமீர் - பாவ்னி ஜோடி காதலிப்பதாக ஏற்கெனவே கிசுகிசுக்கள் பரவி வரும் நிலையில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அடுத்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

    சின்னத்திரை ரசிகர்களை குதுகலப்படுத்தும் வகையில் விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சி இளைஞர்களின் ஃபேவரெட் ஷோக்கள் லிஸ்டில் ஒன்றாக உள்ளது. சண்டைகள், சச்சரவுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு பெயர் போன பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுவார்கள். முதல் சீசன் கடந்த ஆண்டு வெற்றிக்கரமாக முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் அதிகப்படியான ரசிகர்களை பெற்றுள்ள ஜோடி என்றால் அது அமீர்  -  பாவ்னி

    உண்மையை தெரிந்து கொள்ளும் ஹேமா... பாரதி - கண்ணம்மா ரகசியம் உடைந்தது!

    பிக் பாஸ் சீசன் 5ல் இந்த ஜோடிக்கு கிடைத்த ரீச்சை வைத்து பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் இருவரையும் ஜோடியாக களம் இறக்கியது விஜய் டிவி. இருவரும் நடனத்தில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லை  இருவருவரின் நெருக்கமும் அதிகமாகி வருகிறது. ஷோவில் பிரியங்காவும் ராஜூவும் அமீர் -  பாவ்னியை  பயங்கரமாக கலாய்கின்றனர். 3 வது வார எபிசோடில் பாவ்னி, எனக்கு அமீரை பிடிக்கும் என ஓப்பனாக கூறி இருந்தார். அவர் காதலை ஏற்றுக் கொள்ள டைம் வேண்டும் எனவும் அவர் கூறி இருந்தார்.

    COOK WITH COMALI : இந்த வார எபிசோடில் செம்ம சர்ப்ரைஸ் இருக்கு!

    அதே போல் போன வார எபிசோடில் பாவ்னியின் அக்கா மற்றும் தங்கை இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து அமீரை புகழ்ந்து தள்ளி இருந்தனர். அதுமட்டுமில்லை அமீருக்கு நன்றி சொல்லி வாட்ச்சும் கிஃப்ட்  கொடுத்தனர். என்னதான் இது  டான்ஸ் நிகழ்ச்சியாக இருந்தாலும் அமீர் - பாவ்னி லவ் ட்ராக் ஒருப்பக்கம் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அவர்களை டீஸ் செய்ய பிரியங்கா அவ்வப்போது வித்தியாசமான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார்.



    அந்த வகையில் இந்த வார எபிசோடில் அமீர் - பாவ்னி இருவரும் ஒருவரையொருவர் எப்படி புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை செக் செய்வதற்கு டாஸ்க்  ஒன்றை வைக்கிறார் பிரியங்கா.  அதில் அமீர், பாவ்னிக்கு பிடித்தது மல்லிகை பூ, புடவை என கூறி ஸ்கோர்ஸ் அள்ளுகிறார். மொத்தத்தில் இந்த ஜோடிகளை வைத்தே பிபி சீசன் 2 நிகழ்ச்சியை விஜய் டிவி முடித்து விடும் போல . அதே போல் அமீர் - பாவ்னி காதல் வதந்தியும் கூடிய சீக்கிரத்தில் உண்மையாகும்  அனைத்து சாத்திய கூறுகளும் தெரிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Anchor Priyanka, Bigg Boss Tamil, Television, Vijay tv

    அடுத்த செய்தி