• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தென்றல் வந்து என்னை தொடும் : இந்த அபியோட தாலி சென்டிமென்டுக்கு ஒரு அளவே இல்லையா?

தென்றல் வந்து என்னை தொடும் : இந்த அபியோட தாலி சென்டிமென்டுக்கு ஒரு அளவே இல்லையா?

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் அறிமுக புரமோவே சர்ச்சையில் வெடித்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்.

  • Share this:
    தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் தற்போது மகா சங்கமம் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அபியின் தாலி சென்டிமெண்ட் வசனங்கள் இந்த வாரமும் தொடர்கிறது.

    விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் அறிமுக புரமோவே சர்ச்சையில் வெடித்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். தமிழ்நாட்டில் தாலி சென்டிமென்டுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. அந்த கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த புரமோ பெரும் சர்ச்சையை சந்தித்திருந்தது. இந்நிலையில் தற்போது சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. விருப்பமில்லாமல், அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தாலியை உண்மையாக மதித்து வாழும் பெண்ணின் கதைதான் இந்த சீரியலின் ஒன்லைன் ஸ்டோரி.

    ஆனால் இந்த தாலி சென டிமெண்ட்டை வைத்துக் கொண்டு மொத்த சீரியல் எபிசோடையும் ஓட்ட நினைப்பது அபத்தம். சீரியலின் நாயகனான வெற்றியை திருத்தி அவனுடன் சேர்ந்து வாழ முடிவு எடுக்கிறார் நாயகி அபிநயா. தனது அப்பாவை எதிர்த்து கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால் வெற்றியின் வீட்டில் அபியை யாரும் சேர்த்து கொள்ளவில்லை. இதனால் வீட்டு வாசலில் நின்று தர்ணா செய்தவர் ஒருவழியாக வீட்டுக்குள் சென்றார். அப்படியே படி படியாக மொத்த குடும்பமும் அபியை ஏற்றுக் கொண்டு விட்டனர். வெற்றி மட்டும் இன்னும் அபியை ஏற்றுக் கொண்டு சேர்ந்து வாழவில்லை.

    இந்த நேரத்தில் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் மீனாட்சி கல்யாணத்திற்கு வெற்றியின் குடும்பத்தில் இருந்து அனைவரும் சென்றுள்ளனர். இந்த வார முழுக்க இரண்டு குடும்பமும் சந்திக்கும் மகா சங்கமம் எபிசோடுகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. ஏற்கெனவே கார்த்திக் - மீனாட்சி இருவரும் அக்ரிமெண்ட் போட்டு கல்யாணம் செய்வது மொத்த குடும்பத்துக்கும் தெரியும். இதுப்பற்றி அபிக்கு தெரிய, உடனே அபி தனக்கும் வெற்றிக்கும் நடந்த கல்யாணம் பற்றி தாலி சென் டிமெண்ட் பற்றி பேசுகிறார்.



    இதுக்குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. அபியின் பேச்சை கேட்டு மொத்த குடும்பமும் பிரமித்து போகிறார்கள்.  ஆனால் வழக்கம் போல் வெற்றி ”இவ, ஃபாரீனுக்கு தான் போய் படிச்சாளா” ன்னு தலையில் அடித்துக் கொள்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: