குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறினார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கவலைகளை மறந்து மனம் விட்டும் சிரிக்கும் நிகழ்ச்சியாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மாறியிருக்கிறது. முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
Sai Pallavi: ஹீரோயினாகும் சாய் பல்லவியின் தங்கை!
இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா எலிமினேட் ஆன நிலையில் மற்ற 5 பேரும் போட்டியில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் பவித்ராவுக்கும். அஸ்வினுக்கும் கடினமான போட்டி நிலவியது. இதில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உருவானது. இதனையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் பவித்ரா வெளியேறுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்