சின்னத்திரை தொலைக்காட்சிகளில் பல இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மக்களின் மனதை கவர்ந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக சீரியல்களில் நடிக்கும் சின்னத்திரை பிரபலங்களை மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களை தங்களின் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினரை போன்று பாவிப்பார்கள். அந்த வகையில் சில நடிகைகளை இல்லத்தரசிகளுக்கும், இளைஞர்களுக்கும் அதிகம் பிடிக்கும். இதில் விஜய் டிவியின் பல சீரியல்களில் நடித்து வந்த பவித்ரா ஜனனியும் அடங்குவார்.
இவர் தனது கேரியரை சீரியல்களில் நடிப்பதன் மூலம் தொடங்கினார். அதன்படி விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான 'ஈரமான ரோஜாவே' சீரியலில் நடித்து வந்தார். மலர்விழி வெற்றிவேல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த வந்த இவருக்கு இந்த சீரியல் மூலம் தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த சீரியல் முடிவடைந்த நிலையில் தற்போது 'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியலில் அபிநயா என்கிற முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க.. சிக்கியது ஆதாரம்.. தமிழ் – சரஸ்வதி கல்யாணம் நடக்க வாய்ப்பு இல்லை!
கடந்த சீரியல்களை போன்றே இதிலும் இவருக்கு தனியான ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவரின் நடிப்பு தனித்துவமாக உள்ளது. குறிப்பாக இந்த இந்த சீரியலில் துடிப்பான, தைரியமான ரோல் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காகவே தினமும் மதிய நேரம் தவறாது மக்கள் பார்த்து விடுகின்றனர். இதில் அபிநயா பிரபல நீதிபதியின் மகளாக அறிமுகமானார். இவர் அமெரிக்கா சென்று படித்தவர். இருப்பினும் இவர் ஒரு பழமைவாதி, மூடநம்பிக்கை உள்ள கலாச்சாரங்களை நம்பக்கூடிய பெண்ணாக உள்ளார்.
இதன் விளைவாக இவரின் அனுமதி இல்லாமலே இவருக்கு தாலி கட்டியவனை காவல்நிலையத்தில் பிடித்துக் கொடுப்பதற்கு பதிலாக என்ன ஆனாலும் அவர் தான் தன் என்கிற எண்ணத்துடன் அவருடன் வாழ வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இப்படியாக இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க.. கடைசியில் இதுதான் உங்க ட்விஸ்டா? கையெடுத்து கும்பிட்ட கண்ணம்மா!
இந்த சீரியலின் கதாநாயகியான ப
வித்ரா ஜனனி அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். அதன்படி தற்போது இவர் மணாலிக்கு சென்று வந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் இவர் வீடியோ மற்றும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை இவரின் ரசிகர்கள் பலர் பார்த்து வருகின்றனர். இந்த பதிவில், "மணாலியில் என்னுடைய முதல் பயணம் இது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படங்களில் குளிர்கால உடைகளான ஜர்கின், குள்ளா போன்றவற்றை அணிந்து கொண்டு அழகாக போஸ் தருகிறார். அவர் பகிர்ந்த புகைப்படங்களை பார்ப்பதற்கு மிக அருமையாக உள்ளது. அந்த இடம் முழுக்க பனிப்போர்வையில் மூழ்கி கிடைக்கிறது. இவர் பகிர்ந்த மற்றொரு பதிவில் பனிக்கட்டியில் நிறைந்த தரையில் கீழே விழுந்து விழுந்து ஜாலியாக இவர் விளையாடி வந்துள்ளார். இந்த
புகைப்படங்கள் மற்றும் வீடியோவை நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். மேலும் பலர் இந்த பதிவிற்கு தங்களது கருத்துக்களையும் போஸ்ட் செய்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.