• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கடைசி வரை நான் தனியா இருக்கணுமா? கணவரின் நினைவலையை பகிரும் பவானி!

கடைசி வரை நான் தனியா இருக்கணுமா? கணவரின் நினைவலையை பகிரும் பவானி!

பிக் பாஸ் 5 புரமோ

பிக் பாஸ் 5 புரமோ

”சாகும் வரை கடைசிவரைக்கும் அவரை நினைத்துக் கொண்டு வாழ்ந்து விடுவேன்”

  • Share this:
    பிக் பாஸ் 5 சீசனில் பல சோகங்களை மனதில் அடக்கி வைத்திருக்கும் பவானி ரெட்டி இன்று வெடித்து அழுகிறார்.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 ஆவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. தினமும் நிகழ்ச்சியை பார்ப்பதன் மூலம் அவர்களை பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. அதிலும் இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். இதில் பலரும் மாடலிங் துறையை சேர்ந்தவர்கள். 18 போட்டியாளர்களில் 10 போட்டியாளர்கள் பெண்கள் தான்.

    அதில் பவானி ரெட்டியும் ஒருவர். நிகழ்ச்சி தொடங்கிய 2 ஆவது நாளே இவருக்கு ஆர்மி உருவானது. அதுமட்டுமில்லை 33 வயதாகும் பவானி பார்ப்பதற்கு சின்ன பெண் போல் தெரிவது கூடுதல் பிளஸ். பார்ப்பதற்கு சந்தோஷமாக இருப்பது போல் தெரியும் பவானி வாழ்க்கையில் வெளியில் சொல்ல முடியாத சோகமும் அரங்கேறியுள்ளது. கல்யாணம் ஆன 8 மாதத்திலே இவரின் காதல் கணவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சோகத்தில் இருந்து பவானியால் அவ்வளவு எளிதாக வெளியில் வரமுடியவில்லை. அதற்கான ஒரு வாய்ப்பாக தான் பிக் பாஸ் போட்டியை தேர்ந்தெடுத்துள்ளார் பவானி.

    நிகழ்ச்சி தொடங்கிய 4 நாட்களில் பவானி ரெட்டி, இறந்துபோன தன் கணவர் குறித்து நினைத்து கண்கலங்கி பல தருணங்களில் அழுது இருக்கிறார். ஏற்கெனவெ, இசைவாணியிடம் “ ஹீரோயினாக ஆக வேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது. சாகும் வரை கடைசிவரைக்கும் அவரை நினைத்துக் கொண்டு வாழ்ந்து விடுவேன்” என கூறி இருந்தார்.



    இந்நிலையில் கதை சொல்லட்டுமா டாஸ்கில் தனது காதல், திருமணம், கணவர் தற்கொலை குறித்து பகிர்ந்து கொள்கிறார். அதுக்குறித்து புரமோ தற்போது வெளியாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: