Home /News /entertainment /

சீரியலில் மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் அப்படி ஒரு லவ்.. பாவம் கணேசன் குணவதி கணவரை கண்டுபிடித்த கதை!

சீரியலில் மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் அப்படி ஒரு லவ்.. பாவம் கணேசன் குணவதி கணவரை கண்டுபிடித்த கதை!

பாவம் கணேசன் குணவதி

பாவம் கணேசன் குணவதி

சீரியலில் குணவதியாக நடிக்கும் நேகா கவுடா நிஜத்திலும் திருமணம் ஆனவர். இவரின் காதல் கதை சீரியலை விட மிகப் சுவாரசியமானது.

  • 2 minute read
  • Last Updated :
    விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் பாவம் கணேசன். இதில் குணவதி கேரக்டரில் நடிக்கும் நடிகை நேகா கவுடாவின் திருமண வாழ்க்கை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    பாவம் கணேசன் சீரியலில் கதைப்படி, குணா 15 வருடங்களாக கணேசனை காதலித்து வந்தார். இந்த விஷயமே சில நாட்கள் முன்பு தான் தெரிந்தது. இந்த சமயத்தில் குணவதிக்கும் கணேசனின் அம்மாவுக்கு மிகப் பெரிய சண்டை வெடிக்க, கடைசியில் குணவதியை கல்யாணம் செய்து கொண்டார் கணேசன். சீரியலில் மிகப் பெரிய திருப்பமாக இந்த காட்சிகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இந்த சீரியலில் குணவதியாக நடிக்கும் நேகா கவுடா நிஜத்திலும் திருமணம் ஆனவர். இவரின் காதல் கதை சீரியலை விட மிகப் சுவாரசியமானது.

    நேகாவின் முதல் அறிமுகமே கன்னட சீரியல் தான். அதன் மூலமே இல்லத்தரசிகர்களின் இடத்தில் நல்ல இடம் பிடித்து விட்டார் அங்கிருந்து தமிழ் பக்கம் வந்தார். தமிழில் இவரின் முதல் சின்னத்திரை சீரியல் சன் டிவியில் ஒளிப்பரபான கல்யாணப் பரிசு. இதில் கணவனுக்காக எதையும் செய்யும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இவருக்காக தனி ஃபேன்ஸ் பேட்ஜ் எல்லாம் ஓபன் செய்யப்பட்டது. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில் தான். இவருடைய அப்பா கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தியேட்டர் ஆர்ட்டிஸ்டாகவும் நேகா கவுடா இருந்திருக்கிறார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு இவரின் காதல் திருமணம் அரங்கேறியது. சந்தன் என்பவரை கரம் பிடித்தார். இவர்களின் காதல் பயணம் 10 அம் வகுப்பு படிக்கும் போதே தொடங்கியது. ஸ்கூல், காலேஜ் என இவர்களின் நட்பு தொடங்கி இறுதியில் கல்யாணத்தில் முடிந்தது. நேகாவின் கணவர், பீரிகேஜி படிக்கும் போதே நேகாவிடம் லவ் புரபோஸ் செய்திருக்கிறார். அதன் பின்பு நேகா, 10 ஆவது படிக்கும் போது இதை மறுபடியும் தொடங்கி இருக்கிறார். இப்படி தான் 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களின் காதல் தொடர்ந்து கடைசியில் அது கல்யாணத்தில் முடிந்தது.



     




    View this post on Instagram





     

    A post shared by Neha Gowda (@neharamakrishna)






    இந்த தகவல்கள் அனைத்தும் நேகா மற்றும் சந்தன் இருவரும் கன்னட ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக கலந்து கொண்ட போது வெளிவந்த சுவாரசிய நிகழ்வுகளே. திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் துணையுடன் சென்னையில் தங்கி தனது நடிப்பை தொடர்கிறார் நேகா. அதுமட்டுமில்லை கன்னட கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி ரியாலிட்டி ஷோவில் இருவரும் ஃபைனலிஸ்டாக தேர்வாகியுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி