• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 10 வது படிக்கும் போது தொடங்கிய பயணம்... காதல் கணவரின் பலத்தால் சீரியலில் கலக்கும் பாவம் கணேசன் குணவதி!

10 வது படிக்கும் போது தொடங்கிய பயணம்... காதல் கணவரின் பலத்தால் சீரியலில் கலக்கும் பாவம் கணேசன் குணவதி!

பாவம் கணேசன் சீரியல் குணா

பாவம் கணேசன் சீரியல் குணா

இவர் கன்னட சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணப்பரிசு வாய்ப்பு கிடைக்க தமிழிலும் நடித்தார்.

  • Share this:
    விஜய் டிவி பாவம் கணேசன் சீரியலில் குணவதியாக நடிக்கும் சீரியல் நடிகை நேகா கவுடா, 10 ஆவது படிக்கும் போதே தனது திரைபயணத்தைத் தொடங்கி விட்டார் தெரியுமா?

    தமிழ் சீரியலில் கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல் நடிகைகளின் வரவை அதிகம் பார்க்கலாம். சீரியல்களில் இவர்களின் நடிப்பை பிடித்துவிட்டால் போது ரசிகர்கள் தங்கள் வீட்டு பெண்ணாக இவர்களை ஏற்றுக்கொள்வது தான் சின்னத்திரை சீரியல்களின் பலமே. அந்த வகையில் கன்னடத்தில் இருந்து வந்து ஒரு சீரியல் மூலமே இல்லத்தரசிகர்களின் இடத்தில் நல்ல இடம் பிடித்து விட்டார் நடிகை நேகா கவுடா. இப்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாவம் கணேசன் சீரியலில் குணவதி ரோலில் நடித்து கொண்டிருக்கிறார். இவரின் முதல் சின்னத்திரை சீரியல் சன் டிவியில் ஒளிப்பரபான கல்யாணப் பரிசு.

    1000 எபிசோடுகளை கடந்து வெற்றிப்பெற்ற இந்த தொடரில் லீட் ரோலில் நடித்தார். இவருடன் நடிகை ஸ்ரீதேவியும் இணைந்து நடித்திருந்தார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில் தான்.இவருடைய அப்பா கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். குடும்பத்திலே சினிமா கலந்திருந்தால் நேகாவுக்கு அந்த ஆசை மரம் போல் வளர்ந்தது. அதற்கு முதல் படியாக முறையாக நடனம் பயின்றார். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தியேட்டர் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்திருக்கிறார். பின்பு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து கன்னட சீரியல் மூலம் தனது பயணத்தைத் தொடங்கினார். 2013 ஆம் ஆண்டு இவர் கன்னட சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணப்பரிசு வாய்ப்பு கிடைக்க தமிழிலும் நடித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நடிப்பில் பிஸியாக இருந்த சமயத்தில் 2018 ஆம் ஆண்டு சந்தனை திருமணம் செய்துகொண்டார்.இது காதல் திருமணம் ஆகும். 10 ஆவது படிக்கும் போது தொடங்கியது திரைப்பயணம் மட்டுமில்லை இவர்களின் காதல் பயணமும் தான்.



    பீரிகேஜில் பேப்பரில் லவ் யூ என எழுதி சந்தன் சேட்டை செய்ய அப்படியே தொடர்ந்த இவர்களின் நட்பு இன்று திருமணத்தில் முடிந்து இனிமையாக சென்று கொண்டிருக்கிறது. சந்தனிடம் நேகா 10 படிக்கும் போது தான் புரபோஸ் செய்திருக்கிறார். கன்னடத்திலும் கணவருடன் சேர்ந்து ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். இதற்கிடையில் சந்தனின் துணையோடு அவ்வப்போது சென்னை வந்து பாவன் கணேசன் ஷூட்டிங்கிலும் கலந்து கொள்கிறார் நேகா.

    also read.. இந்த சின்ன வயசுல சீரியலில் லீட் ரோல்.. மிகப்பெரிய வெற்றி! பொறாமைப்பட வைக்கும் சக்தி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: