Home /News /entertainment /

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா vs முல்லை ரசிகர்கள்! - என்ன தான் பிரச்சினை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா vs முல்லை ரசிகர்கள்! - என்ன தான் பிரச்சினை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

Pandian stores mullai காவ்யா கேஷுவலாக சொல்லிவிடுகிறார்.  ஆனால் இதனை எமோஷனலாக சித்ரா ரசிகர்கள் டீல் செய்கின்றனர். உண்மையை சொல்லப் போனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பொருத்தவரையில் தனம் ரோலுக்கு தான் வெயிட்டேஜ் அதிகம். ஆனால்..

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று  பாண்டியன் ஸ்டோர்ஸ்.  அந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்துக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. முல்லையாக தமிழ்நாட்டு மக்கள் மனதில் இடம் பிடித்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அவருக்கு பதில் காவ்யா அறிவுமணி அந்த ரோலில் நடிக்க ஒப்பந்தமானார்.

விஜே சித்ரா போன்ற அனுபவமுள்ள நடிகை நடித்த முல்லை ரோலில் சின்னத்திரையில் அனுபவம் இல்லாத காவ்யாவை தேர்வு செய்ததற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து ஃபேன் பக்கங்களில்  விஜய் டிவியை டேக் செய்து பதிவிட்டனர்.

காவ்யா, பாரதி கண்ணம்மா சீரியலில் தான் முதன் முதலில் அறிமுகமானார். அதற்கு முன்னர் சின்ன சின்ன ரோலில், குறும்படங்களில் நடித்திருந்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகன் சித்தி மகளாக நடித்திருப்பார் காவ்யா. அந்த சீரியலில் நடிக்கும் போது தனித்து தெரிவார். காரணம் அவரது கேஷுவல் நடிப்பு. ரொம்பவும் மெனக்கெட மாட்டார்.

முல்லையாக ஆரம்பத்தில் ரசிகர்கள் அவரை ஏற்று கொள்ளவில்லை என்றாலும், போக போக அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற தேர்வு என்று சொல்லுமளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தினார்.

Pandiyan stores kaavya arivumani
பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா


ஒவ்வொரு முறையும் காவ்யா பேட்டி யூ டியூப் சேனல்களில் வெளிவரும் போதெல்லாம், சர்ச்சையும் வெடிக்கிறது. காரணம் சித்ரா குறித்து தன் பேட்டிகளில், ”அவர் பற்றி எனக்கு தெரியாது.’’ என்று சொல்லி விடுகிறார்.  இதனால் சித்ரா ரசிகர்கள் கடுப்பாகி காவ்யாவை விமர்சிக்க தொடங்கிவிடுகின்றனர்.

காவ்யா அண்மையில் கொடுத்த பேட்டியில் கூட, ”சித்ரா அக்காவை பத்தி எனக்கு தெரியாது. தெரியாததை தெரியாதுன்னு தான் சொல்ல முடியும்.  உண்மைய சொன்னா விமர்சிக்கிறாங்க.  ஆட்டிட்யூட் புடிச்சவ-ன்னு திட்றாங்க’’  என்று வருத்தப்பட்டார்.

காவ்யா கேஷுவலாக சொல்லிவிடுகிறார்.  ஆனால் இதனை எமோஷனலாக சித்ரா ரசிகர்கள் டீல் செய்கின்றனர். உண்மையை சொல்லப் போனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பொருத்தவரையில் தனம் ரோலுக்கு தான் வெயிட்டேஜ் அதிகம். ஆனால் சித்ராவின் அபார நடிப்பால் முல்லை கதாபாத்திரம் உயிர் பெற்றது. முல்லை ரோல் ரீச் ஆனதற்கு முக்கிய காரணம் சித்ராவின் ஆத்மார்த்தமான நடிப்பு தான்.

இப்போதெல்லாம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க டிக் டாக், ரீல்ஸ் வீடியோவில் பிரபலமாக இருந்தாலே போதுமானதாக இருக்கிறது. ஆனால் சித்ரா பல ஆடிஷன்களில் கலந்து கொண்டு நிராகரிப்புகள், தோல்விகளை சந்தித்து விடா முயற்சியால் ’சின்ன பாப்பா  பெரிய பாப்பா’ வாய்ப்பை பெற்று பிரபலமானார். அதன் பின்னர் நிறைய உயரங்களை தொட்டார்.

Pandiyan stores kaavya arivumani
பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா


காவ்யாவின் கிராஃப் அப்படிப்பட்டது அல்ல.  முல்லை கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்று அவர் மெனக்கெடவில்லை, ”சும்மா போய் டெஸ்ட் ஷூட் பண்ணேன். ஓகே சொல்லிட்டாங்க’’ என்று பேட்டியில் கேஷுவலாக சொல்கிறார். சித்ரா இருந்தவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவர் தனித்து தெரிவார். அவரின் காட்சிகள் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அந்த எதிர்பார்ப்பு இருப்பதே இல்லை என்பதுதான் நிஜம்.

இதையும் படிங்க..  பிக் பாஸ் சிபி உண்மையில் எப்படி? - பெர்சனல் பக்கங்கள்

சித்ரா ஆத்மார்த்தமாக நடித்த ரோலை காவ்யா புரபஷனல் ஆக டீல் செய்கிறார் என்பது சித்ரா ரசிகர்களின் குமுறல். யார் பக்கம் நியாயம் என்பதை சுட்டிக் காட்டவே முடியாத சூழல் இது. காவ்யா பேட்டிகளில் மெனக்கெடாதது போல காண்பித்து கொண்டாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த பிறகு உடல் எடையை குறைத்திருக்கிறார், நடிப்பையும் மெருகேற்றி இருக்கிறார்.

அண்மையில் காவ்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் விட்டு விலகப் போவதாக தகவல் வெளியானது. ”திரைப்பட வாய்ப்பு வந்தால்  சீரியலை விட்டு விலகிவிடுவேன், மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் வேற வழி தெரியல’’ என்று ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் காவ்யா. தன் புத்தாண்டு வாழ்த்தில் கூட ’புதிய தொடக்கங்கள் காத்திருக்கின்றன’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.  என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஒருவேளை காவ்யா குட் பை சொல்லிவிட்டால் முல்லை கதாபாத்திரத்திற்கு வேறு யாரை தேர்வு செய்வார்கள் என்பதை கெஸ் செய்யவே முடியவில்லை!



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Aswini S
First published:

Tags: Pandian Stores, Television, Television Program, Vijay tv, Vj chitra

அடுத்த செய்தி