பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் சரவணன விக்ரம் தங்கையின் திருமணத்திற்கு ஒட்டுமொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், நடிகைகளும் திரண்டு சென்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நெடுந்தொடராக இருந்து வருகிறது. இதில் நடிக்கும் நடிகர் , நடிகைகள் ரசிகர்களுக்கு பரீட்சையமான முகமாக மாறிவிட்டனர். மூர்த்தி, தனம், கதிர், முல்லை, ஜீவா, மீனா, கண்ணன் என இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் தனியாக ஃபேன்ஸ் பேட்ஜ் இணையத்தில் உண்டு. அந்த அளவுக்கு ரசிகர்களை தங்களது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்
சீரியல் நடிகர், நடிகைகள் கேமராவை தாண்டி ரியல் லைஃபிலும் மிகவும் நெருக்கமாக உறவினர்கள் போல் பழகி வருகின்றனர்.
அதற்கு எடுத்துக்காட்டாக பல நிகழ்வுகளை கூறலாம். மீனாவாக நடிக்கும் ஹேமாவின் வளைக்காப்பு தொடங்கி எந்த விசேஷமாக இருந்தாலும் சரி சக நடிகர், நடிகைகள் ஒன்றாக சேர்ந்து சென்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ரோலில் நடிக்கும்
சரவணன விக்ரம் தங்கையின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடைப்பெற்றது. சிம்பிளாக சரவணன விக்ரமின் வீட்டில் நடந்த இந்த நிகழ்வுக்கு கதிராக நடிக்கும் குமரன், தனமாக நடிக்கும் சுஜிதா ஆகியோர் ஒன்றாக சென்று மணமக்களை வாழ்த்தி இருந்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்ற சரவணனின் தங்கை சூர்யாவின் கல்யாணம் நேற்றைய தினம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், நடிகைகள் திரண்டு சென்றுள்ளனர். காவ்யா அறிவுமணி, குமரன், சுஜிதா, கம்பம் மீனா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குனர், தொழில் நுட்ப கலைஞர்கள், ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகா, பாக்கியலட்சுமி விஜே விஷால் என ஒட்டுமொத்த விஜய் டிவி பட்டாளமும் ஒன்றாக சேர்ந்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறி இருக்கின்றனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் சரவணன விக்ரமுக்கு தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.