Home /News /entertainment /

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனத்துடன் சேர்ந்து லட்சுமி அம்மாவாக ஷீலா எடுத்துக் கொண்ட புகைப்படம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மாவாக நடித்த ஷீலா மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனத்துடன் சேர்ந்து லட்சுமி அம்மாவாக ஷீலா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ரசிகர்களின் பேராதரவுடன் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர்ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். திங்கள் முதல் சனி வரை இரவு 8 - 8.30 வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை சொல்லும் இந்த சீரியலில் அண்ணன் - தம்பிகளின் பாசம் பார்ப்பவர்களை நெகிழ வைக்கும். இந்த சீரியலில் மூர்த்தியின் அம்மாவாக லட்சுமி என்ற ரோலில் சீரியல் தொடங்கிய ஆண்டிலிருந்து நடிகை ஷீலா நடித்து வந்தார். இவர் நடிகர் விக்ராந்தின் தாயார் ஆவார்.

    அப்பா என கெஞ்சும் லட்சுமி.. ஹீரோ பாரதி வில்லனாகி விட்டார்!

    சில மாதங்களுக்கு முன்பு சீரியலில்  திடீர் திருப்பமாக இவர் இறப்பது போல கதை மாற்றப்பட்டது. இந்த காட்சிகள் ரசிகர்களை சோகத்திலும் கண்ணீரிலும் ஆழ்த்தியது. அவரது இறப்பு மற்றும் இறுதி சடங்கு காட்சிகள் கிட்டத்தட்ட 1 வாரம் வரை ஒளிபரப்பாகி ரசிகர்களை உணர்ச்சிமயமாக ஆக்கியது நினைவிருக்கலாம். இதனால் அந்த மாதத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டி.ஆர்.பியிலும் முதல் இடத்தை பிடித்து இருந்தது.

    ஒரு பெரிய கேப்.. கடைசியில் ரச்சிதா கணவர் தினேஷ் எடுத்த சூப்பர் முடிவு!

    பின்னர், ஷீலா பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அம்மாவாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து அந்த சீரியலில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திடீரென்று இவர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனத்துடன் சேர்ந்து லட்சுமி அம்மாவாக ஷீலா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இதனை பார்த்த ரசிகர்கள் இறந்தவர் எப்படி மீண்டும் வருவார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். சீரியலில் லட்சுமி அம்மா இறந்தாலும் அவர் அடிக்கடி தனத்தின் கனவில் வந்து பேசுவது போல் காட்சிகள் சீரியலில் இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் மீண்டும் லட்சுமி அம்மாவாக ஷீலா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருப்பவர்களின் கனவில் வந்து பேச போகிறார் போல. அதற்கான காட்சிகள் தான் படமாக்கப்பட்டு இருக்கும் என கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி