முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கதிரை விட்டு கொடுக்காத மூர்த்தி.. கடைசி நேரத்தில் செய்த செயல்!

கதிரை விட்டு கொடுக்காத மூர்த்தி.. கடைசி நேரத்தில் செய்த செயல்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கதிரின் கடையில் முதல் வியாபாரம் மூர்த்தி கையால் தான் நடக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் அண்ணன் - தம்பிகளின் பாசத்தை நிரூப்பிக்கும் வகையிலான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

கதிர் - முல்லை புதியதாக தொடங்கி இருக்கும் ஹோட்டலுக்கு மூர்த்தி குடும்பத்தில் இருந்து எல்லோரும் வருவார்களா? என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில் மூர்த்தி கதிரின் டிபன் கடையை ஆசீர்வாதம் செய்யும் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. கதிர் - முல்லை வீட்டை விட்டு சென்றதும் மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. இதனால் அவர் ஆப்ரேஷன் செய்துக்கொண்டு  வீட்டில் ரெஸ்ட் எடுக்கிறார். தனம் கடையை பார்த்துக் கொள்கிறார். இது ஒருபுறம் இருக்க, கதிர் ஹோட்டலில் ஹெல்பர் வேலைக்கு சென்றார். ஆனால் முல்லை அம்மாவால் அந்த வேலையும் அவரை விட்டு போகிறது. ஆனால் ஹோட்டலில் வேலை செய்ததால் அவருக்கு சமையல் கைக்கொடுக்கிறது.

சின்சியாரிட்டிக்கு மறுபெயர் ஆல்யா.. . சொன்னது யார் தெரியுமா?

இதை வைத்து சின்னதாக ஹோட்டல் தொடங்குகிறார். இந்த ஹோட்டல் திறப்பு விழாவுக்கு தனத்தை அழைக்கிறார். மூர்த்தியை நேரில் பார்த்து சொல்ல அவருக்கு தைரியம் இல்லை. இதனால் தனத்தை மட்டும் கடையில் பார்த்து சொல்கிறார். ஒருபக்கம் கடை வேலை நடக்கிறது. கதிரின் ஹோட்டல் திறப்பு விழாவுக்கு மூர்த்தி வீட்டில் இருந்து யார் வருவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.  இந்நிலையில் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் மூர்த்தியே ஹோட்டலுக்கு வருகிறார்.

' isDesktop="true" id="784215" youtubeid="50vI0ViI0ms" category="television">

புரமோவில் ஒரு சிறுமியிடம் பணம் கொடுத்து ஹோட்டலில் சாப்பாடு வாங்க சொல்கிறார் மூர்த்தி. அவரும் வாங்கி தருகிறார். கடையில் முதல் வியாபாரம் மூர்த்தி கையால் தான் நடக்கிறது. இதை மூர்த்தியின் மாமா பார்த்து விடுகிறார். உடனே அவர் கதிரிடம் காட்டுகிறார். அண்ணன் தான் டிபன் வாங்கினார் என்ற விஷயம் தெரிந்ததும் கதிருக்கு சந்தோஷம் தாங்கல. அவரை மூர்த்தியும் பார்க்கிறார். என்னதான் கோபம் இருந்தாலும் கதிரை மூர்த்தி விட்டுக் கொடுக்கவில்லை. டிபனை வாங்கி கொண்டு வீட்டுக்கு போய் கயல் பாப்பாவிடம் சேர்ந்து சாப்பிடுகிறார் மூர்த்தி. இதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் அண்ணன் - தம்பி பாசம் என்பது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Pandian Stores, TV Serial, Vijay tv