Home /News /entertainment /

அண்ணனை பார்க்க ஓடி வந்த கதிர்.. அதிர்ச்சி தந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

அண்ணனை பார்க்க ஓடி வந்த கதிர்.. அதிர்ச்சி தந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிர் மீண்டும் தனது குடும்பத்தை சந்திக்கிறார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆஸ்பிட்டலில் இருக்கும் மூர்த்தியை பார்க்க ஓடி வருகிறார் கதிர். இதுக் குறித்து புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    கூட்டு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருந்த மூர்த்தியின் குடும்பம் இப்போது இரண்டாக பிரிந்துள்ளது. ஆனந்தம் படத்தின் சீரியல் வேர்ஷன் என்றாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வில்லன், வில்லி, மாமியார், மருமகள், பழி வாங்குதல், கொலை முயற்சி போன்ற எந்த ஒரு நெகடிவிட்டியும் இல்லாத ஃபேமலி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியின்  டாப் சீரியல் லிஸ்டில் உள்ளது. ஒரு சின்ன மளிகை கடை,  அதை நடத்தும் 4 அண்ணன் தம்பிகள், அவர்களின்  மனைவிகள்  இதை சுற்றி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதை பயணிக்கும். குடும்பத்தின் மூத்த அண்ணனான மூர்த்தியும் அவரின் மனைவி தனமும் இந்த குடும்பத்தை தாங்கி பிடிக்கும் தூண்களாக இருக்கின்றனர்.

    உண்மையை போட்டுடைத்த வருண்.. சத்யாவுடன் சேர போகும் நேரம்!

    இந்நிலையில் தனத்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரச்சனை வெடிக்கிறது.மீனா அப்பா, தனத்தின் அம்மா, முல்லையின் அம்மா ஆகியோர் சண்டையை பெரிதாக்க,  கதிர் - முல்லை வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர். மூர்த்தியும் தனமும் எவ்வளவு சொல்லியும் கதிர் கேட்கவில்லை. தனது மனைவி முல்லையை அழைத்துக் கொண்டு வெளியே போய்விட்டார். இந்த அதிர்ச்சியை மூர்த்தியால் தாங்கி  கொள்ள முடியவில்லை. இதனால் அவருக்கு நெஞ்சு வலி வந்து விடுகிறது.ஆஸ்பிட்டலில் இருக்கிறார். ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர் சொல்லிவிட்டார்.



    இப்படி இருக்கையில் மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்த விஷயம் கதிருக்கு தெரிய வருகிறது. அண்ணனை பார்க்க ஓடி வருகிறார். தனத்திடம் அழுது துடிக்கிறார். தன்னால் தான் அண்ணனுக்கு இப்படி ஆனது என கவலையும் கொள்கிறார். தனம்,  அதை எல்லாம் விடு, மீண்டும் வீட்டுக்கு வா என்கிறார். அப்போது தான் மிகப் பெரிய அதிர்ச்சி கொடுக்கிறார் கதிர். மீண்டும் வீட்டுக்கு வர மாட்டேன் என்கிறார். இதை கேட்டு ஷாக்கான தனம், உடனே கதிரை அங்கிருந்து போகும் படி கத்துகிறார்.

    பிக் பாஸ் வைஷ்ணவியை ஃபாலோ செய்த மர்மநபர்.. வெளியானது அதிர்ச்சி வீடியோ!

    இந்த புரமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் முழு எபிசோடுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி