Home /News /entertainment /

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இப்படியொரு நிலைமையா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இப்படியொரு நிலைமையா?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை, கஸ்தூரி அத்தாச்சியின் பேச்சைக் கேட்டு கோயில், பரிகாரம் வரை சென்று விட்டார்

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பணத்தால் மிகப்பெரிய பிரளயமே வீட்டில் வெடிக்கிறது. கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் மூர்த்தியின் வீட்டில் பணப்பிரச்சனை மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் முல்லை - கதிருக்கு குழந்தை பிறக்காது என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இருப்பினும் செயற்கை முறையில் சில ட்ரீட்மெண்டுகளை எடுத்தால் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு லட்சக்கணக்கில் செல்வாகும் என்பதால் உடனடியாக ட்ரீமெண்ட் எடுக்க முடியாமல் நாட்கள் தள்ளிப்போனது. ஆனால் அதற்குள் முல்லை, கஸ்தூரி அத்தாச்சியின் பேச்சைக் கேட்டு கோயில், பரிகாரம் வரை சென்று விட்டார். இதைப்பற்றி கதிர் மூத்தி மற்றும் தனம் அண்ணியிடம் மனம் நொந்து பேசினார்.

    சத்யாவா இப்படி ஒரு காரியத்தை செய்தார்? ஷாக்கில் வருண்!

    இதன் வலியை புரிந்து கொண்ட மூர்த்தி எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை உடனியாக ட்ரீமெண்ட் எடுக்கலாம் என முடிவு எடுத்து விட்டார். ஆனால் இந்த முடிவில் மீனாவுக்கு உடன்பாடு இல்லை. அதற்கு காரணம், வீடு கட்டாமல் இப்போது அவசர அவசரமாக 5 லட்சம் செலவு செய்வது அவருக்கு பிடிக்கவில்லை. ஆனால் வீட்டில் இருக்கும் மற்ற அனைவரும் முல்லைக்கு உதவலாம் என்கின்றனர் . இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடில் இந்த விஷயத்தை பற்றி மூர்த்தி,  மீனாவிடம் சொல்கிறார்.

    உழைப்புக்கு கிடைத்த வெற்றி... பிரபல விஜய்டிவி சீரியல் நடிகருக்கு தெலுங்கில் கிடைத்த வாய்ப்பு!

    ஆனால் மீனா, இது சரியில்லை என்று கண்ணனிடம் புலம்புகிறார். கடைக்கும் போகும் மூர்த்தி, இதுவரை பேங்கில் சேர்த்து வைத்திருக்கும் மொத்த பணத்தையும் எடுக்க வேண்டும் என ஜீவாவிடம் சொல்கிறார். இதை பார்க்கும் கதிருக்கு, குடும்பத்தை நினைத்து பெருமைக் கொண்டாலும், ஒருபக்கம் கஷ்டமாக இருக்கிறது. இவர்களுடன் நம்முடைய பங்கும் இருக்க வேண்டும் என நினைத்த ஐஸ்வர்யா, உடனே தனது செயினை கழட்டி தருகிறார்.

    ஆனால் மூர்த்தி அதெல்லாம் வேண்டாம் என்கிறார். மொத்தத்தில் இவ்வளவு பண கஷ்டத்திலும் மொத்த குடும்பமும் ஒன்றாக நிற்கின்றனர். இது தான் இந்த குடும்பத்தின் பலமே. அடுத்த சில வாரங்களுக்கு கதிர் -முல்லை குழந்தை பிரச்சனை தான் டெலிகாஸ்ட் செய்யப்படும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி