பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா செய்த காரியம் இருக்கே... வாயடைத்து போன ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

மீனா பதிவிட்டா இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ லைக்ஸ்களை அள்ளி குவித்துள்ளது.

 • Share this:
  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குட்டி அண்ணி மீனா, இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

  சின்னத்திரையில் பெரும் வரவேற்பைப் பெற்ற சீரியல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா ராஜ்குமாருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் ஃபாலோஸ் உண்டு. தனது நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர் மீனா. சீரியலில் மீனாவின் ரோலை ரசிக்காதவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு தனது நடிப்பால சித்ராவுக்கு பிறகு தனக்கென தனி இடத்தை சின்னத்திரையில் பிடித்துவிட்டார் மீனா. கோபத்தில் கத்துவதும், குணத்தில் தங்கமாக இருப்பதும் தான் மீனாவின் சீரியல் கேரக்டர். இந்த சீரியலில் இவர் கர்ப்பமாக காட்டிய போதே நிஜத்திலும் அவர் கர்ப்பமாக இருந்தார். ஆண் குழந்தையை பெற்றெடுத்த அவர் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். அதே போல் லாக் டவுண் காலத்தில் யூடியூப் சேனல் தொடங்கிய மீனா அதிலும் வெற்றிக்கரமாக பயணித்து வருகிறார்.

  அழகு குறிப்பு, மேக் அப் டிப்ஸ், வீடு பராமரிப்பு, ஆடை தேர்வுகள் என மீனாவின் அனைத்து வீடியோக்களும் ஹிட் தான். நடிப்பு, ஃபோட்டோ ஷூட் என பிஸியாக இருப்பவர், தனது குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடுகிறார். தனது குழந்தைக்கு தனியாக நேரம் ஒதுக்கி குழந்தை பராமரிப்பு, தாய் பால் விழிப்புணர்வு ஆகியவற்றையும் தனது வீடியோக்களில் எடுத்துரைத்தார். மீனா இன்ஸ்டா பக்கத்திலும் படு பிஸி. அவ்வப்போது லைவில் வந்து தனது ரசிகர்களுடன் உரையாற்றுவார். வித விதமாக ஃபோட்டோ ஷூட் நடத்தியும் புகைப்படங்களைப் பகிர்வார். அந்த வகையில் மீனா சமீபத்தில் வெளியிட்ட வீடியோ அவரின் ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Hema Rajkumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@hemarajsathish_official)


  பரம சுந்தரி பாடலுக்கு மீனா , படு மாஸாக நடனம் ஆடிய வீடியோ தான் அது. கடந்த சில தினங்களாக பரம சுந்தரி பாடல் இன்ஸ்டாவில் படு வைரல். பலரும் அந்த பாடலுக்கு தங்களது ஸ்ட்டைலில் வீடியோக்களை பதிவேற்றி வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் மீனாவும் பரம சுந்தரி பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். சீரியலில் குடும்ப குத்து விளக்காக சுற்றி வரும் மீனா, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரம சுந்தரி பாடலுக்கு ஆடிய வீடியோ ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: