• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சண்டை வர வைக்கும் ஐஸ்வர்யா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சண்டை வர வைக்கும் ஐஸ்வர்யா!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள் இப்படி சண்டை போடுவது அசிங்கம்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவால் குடும்பத்தில் அவ்வப்போது சண்டை வெடிக்கிறது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மாவின் மறைவுக்கு பிறகு ஐஸ்வர்யா - கண்ணன் ஜோடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதை பயணித்து வருகிறது. எப்படியாவது பாண்டியஸ் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்ற நோக்கில் எதிர் வீட்டில் கண்ணன் - ஐஸ்வர்யாவை குடி வைக்கிறார் கஸ்தூரி அத்தாச்சி. ஆனால் இங்கு நடப்பதோ வேறு. கொஞ்சம் கொஞ்சமாக கண்ணன் பற்றிய பார்வை எல்லோருக்கும் மாறிவிட்டது. தனம் கண்ணனை பார்க்க ரோட்டில் நிற்பது தொடங்கி குழம்பு கொடுப்பது என கடந்த 1 வாரமாக சிரிப்புடன் சீரியல் ஒளிப்பரப்பாகிறது. கண்ணனும் ஐஸ்வர்யாவும் கூடிய விரைவில் மூர்த்தியுடன் சேர்ந்து விடுவார்கள் என பார்த்தால் வீட்டுக்குள் இருக்கும் மீனாவும் முல்லையும் வீட்டை விட்டு வெளியெ போய்விடுவார்கள் போல. அந்தளவுக்கு இரண்டு பெரும் மாறி மாறி சண்டை போட்டு கொள்கிறார்கள். அதற்கும் ஐஸ்வர்யா தான் காரணம்.

    நேற்றைய தினம் தனியாக அழுது கொண்டிருந்த கயல் பாப்பாவை கண்ணன் வெளியே தூக்கி வந்து கொஞ்சுகிறான். இதைப்பார்த்து மீனா, தனத்திடம் சொல்கிறாள். மீனா பின்புறம் வேலையாக இருக்க கயல் பாப்பா கத்தி அழுதது. மனசு கேட்காமல் கண்ணன் ஓடி போய் தூக்கி சமாதானம் செய்தான். இதனால் மீனாவுக்கு பொறுப்பு இல்லை என தனம் திட்டினார். அந்த நேரம் பார்த்து மூர்த்தி வீட்டுக்கு வர, கண்ணன் கையில் குழந்தை இருப்பதை பார்த்து பயங்கர கோபத்தில் மீனாவை திட்டிவிடுகிறார். இதனால் மீனா முகமே மாறிவிடுகிறது. உடனே கண்ணன் அதற்கு மன்னிப்பும் கேட்கிறான். இன்றைய எபிசோடில் வீட்டு வாசலில் கோலம் போடும் மீனா, ஐஸ்வர்யாவிடம் பேச்சு கொடுக்கிறாள். பதிலுக்கு ஐஸ்வர்யாவும் பேச, இருவரும் மாற்றி மாற்றி டிஸ்கஸ் செய்ய அந்த நேரம் பார்த்து முல்லை வெளியே வருகிறார்.

    அப்பாவில் தொடங்கி அப்துல்கலாம் வரை சென்ற அபிஷேக் கதை!

    உடனே மீனாவிடம் ஐஸ்வர்யாவுடன் பேசுவது பற்றி கேட்க, மீனா அதை பெரிதுப்படுத்தி சண்டை போடுகிறார். இரண்டு பேரும் மாத்தி மாத்தி சண்டை போட, ஜீவாவும் கதிரும் இருவரையும் சமாதானம் செய்து சண்டையை முடிவு வைக்கிறார்கள். ஆனாலும் மீனா, முல்லையை விடுவதாக இல்லை. இந்த விஷயம் தனம் காதுக்கு போகாமல் கதிரும்-ஜீவாவும் பார்த்து கொள்கிறார்கள். அடுத்து கடைக்கு சாப்பாடு கொண்டு போகும் முல்லை, வீட்டில் ரொம்ப போர் அடிப்பதால் கடைக்கு வர கதிரிடம் அனுமதி கேட்கிறாள். ஆனால் கதிருக்கு அதில் இஷ்டம் இல்லை. மீனா உடன் அடிக்கடி சண்டை வருவதாக முல்லை சொல்ல, உடனே கதிர் அப்ப மீனா அண்ணியையும் கடைக்கு கூட்டிட்டு வந்துரலாம் என கேலி செய்கிறார்.

    பாண்டியஸ் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் அடுத்த கடை பிரம்மாண்டமாக தயார் ஆகிக் கொண்டிருக்கிறது. கடையின் மாடலை தனத்திடம் காட்ட ஜீவா மாடல் பேப்பரை வீட்டுக்கு கொண்டு வருகிறான். அதை வைத்து முல்லை - மீனா மறுபடியும் சண்டை போடுகிறார்கள். இந்த முறை தனம் முன்னாடியே சண்டை வெடிப்பதால் இருவருக்கும் தனம் அட்வைஸ் செய்கிறார். அதுமட்டுமில்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள் இப்படி சண்டை போடுவது அசிங்கம் என்றும் குறிப்பிடுகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: