• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உதவி செய்த கண்ணனை மறந்த குடும்பம்... குழந்தை முகத்தை காட்டினால் மட்டும் போதுமாம்?

உதவி செய்த கண்ணனை மறந்த குடும்பம்... குழந்தை முகத்தை காட்டினால் மட்டும் போதுமாம்?

மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கும் இந்த நேரத்தில் ஒருவர் கூட கண்ணனை பற்றி நினைக்கவில்லை பேசவும் இல்லை

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மொத்த நபர்களும் தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் உள்ளனர். ஆனால் யாருமே கண்ணனை பற்ரி யோசிக்கவில்லை.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. கண்ணன் - ஐஸ்வர்யா திருமணத்தில் தொடங்கி லட்சுமி அம்மாவின் மரணம் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செண்டிமெண்ட் காட்சிகளால் நிறைந்திருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பெரியதாக எந்த சுவாரசியமான நகர்வும் இல்லை. தனத்திற்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. யாரும் வீட்டில் இல்லாத சமயம் தனத்திற்கு பிரசவ வலி வர, கண்ணன் ஓடி சென்றூ உதவுகிறான். அவனே தனத்தை தூக்கி ஆஸ்பிட்டலில் சேர்த்து மூர்த்தி, கதிர், ஜீவாவுக்கு ஃபோன் பண்ணி தகவலும் சொல்கிறான். ஆனால் கடைசி வரையிலும் கண்ணனுக்கு குழந்தையை காட்டவில்லை.

    ஆஸ்பிட்டலில் இருந்து ஐஸ்வர்யாவை அழைத்து கொண்டு வருத்தத்துடனே கண்ணன் கிளம்புகிறான். இதை நோட் பண்ணது கதிர் மட்டும் தான். 3 நாள் கழித்து வீட்டுக்கு வரும் குழந்தையை எப்படியாவது பார்த்து தூக்கிட வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அங்கு ஏமாற்றம் தான். இன்றைய எபிசோடில் மீனாவின் அப்பா - அம்மா தனம் குழந்தையை பார்த்து நகை வாங்கி போடுகிறார்கள். அடுத்து முல்லையில் அப்பா அம்மா வந்து குழந்தைக்கு நகை போடுகிறார்கள்.

    போதாத குறைக்கு முல்லை ஏன் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்ற பேச்சும் எழும்புகிறது. அதுமட்டுமில்லை வீட்டில் இருக்கும் கஸ்தூரி அத்தாச்சி முடிஞ்ச வரை கொளுத்தி போடுகிறார். முல்லையின் அம்மாவை தனியாக அழைத்து எதிர் வீட்டுக்கு கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீடு குடித்தனம் வந்திருப்பதையும் வில்லங்கமாக சொல்கிறார். இந்த நேரத்தில் மல்லியின் பேச்சும் அங்கு வருகிறது. முல்லையின் அம்மா, முல்லையிடம் குழந்தை பற்றி மாப்பிள்ளையிடம் பேசு என்றும் அறிவுரை சொல்லிவிட்டு செல்கிறார்.

    கேம் விளையாடி பிக் பாஸையே தூங்க வைத்த ஹவுஸ்மேட்ஸ்! யாரு சாமி நீங்கெல்லாம்?

    மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கும் இந்த நேரத்தில் ஒருவர் கூட கண்ணனை பற்றி நினைக்கவில்லை பேசவும் இல்லை. அதுமட்டுமில்லை கண்ணனிடம் குழந்தையை காட்டவும் இல்லை. இந்த ஏக்கத்துடன் கண்ணன் ஐஸ்வர்யாவிடம் புலம்பிகிறான். ஐஸ்வர்யாவும் கண்ணனுக்கு ஆறுதல் கூறுகிறாள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: