Home /News /entertainment /

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் ஹோட்டல் திறப்பு விழா... மூர்த்தி - தனம் வருவார்களா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் ஹோட்டல் திறப்பு விழா... மூர்த்தி - தனம் வருவார்களா?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பொறுத்தவரையில் சின்ன சின்ன நிகழ்வுகள் கூட பெரிய அளவில் காட்டப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் திறக்கும் ஹோட்டலின் திறப்பு விழாவுக்கு மூர்த்தி குடும்பம் வருவார்களா? இல்லையா?  அடுத்த வாரத்தில் இதுக் குறித்த எபிசோடு ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்போது கதிர் -முல்லை கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது வீட்டை விட்டு கதிர் வெளியே போனதில் இருந்து நிறைய கஷ்டங்கள் அவமானங்களை சந்தித்தார். ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து அதை மலர் பார்த்து அசிங்கப்படுத்தி, ஜீவா, கதிரை நினைத்து கண்கலங்கி பல பிரச்சனைகள் அரங்கேறி முடிந்து விட்டன. இப்போது கதிர்,  முல்லை கொடுத்த யோசனையால் சின்ன ஹோட்டல் ஒன்று திறக்க போகிறார். அதற்காக கடை பார்த்து அட்வான்ஸூம் கொடுத்து விட்டார்.

     

    'முத்தழகு’ அஞ்சலியின் நிஜ கணவரை பார்த்து இருக்கீங்களா?

    கடை திறப்புக்கு தனம் அண்ணியை  நேரில் அழைத்தார். முல்லையும் கதிரும் தனியாக இருப்பதை மீனா சந்தோஷமாக பார்க்கிறார். ஆனால் கதிரும் முல்லையும் குடும்பத்தை இழந்து அனாதை போல் நிற்கின்றனர். இதை நினைத்து மூர்த்தியும் கண்ணீர் விடுகிறார். இந்நிலையில் கதிரின் கடை திறப்பு விழாவுக்கு மூர்த்தி குடும்பத்தில் இருந்து செல்வார்களா? என்ற கேள்வி ரசிகர்களை சீரியல் பார்க்க அதிகம் தூண்டுகிறது. என்ன தான் கோபம் இருந்தாலும் மூர்த்தி, தனம், ஜீவா, கண்ணன் ஆகியோர் கதிர் மீது அளவுக்கடந்த அன்பை வைத்துள்ளனர்.

    கண்ணு பட போகுது ஆங்கர் ரக்‌ஷன்.. லைக்ஸ் அள்ளும் ஃபோட்டோஸ்!

    அதனால் கண்டிப்பாக வீட்டுக்கு தெரியாமல் தனித்தனியாக கதிர் கடை திறப்பு விழாவுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அதே போல் கதிரை கண்டிப்பாக மூர்த்தி ஆசீர்வாதம் செய்வார் . பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பொறுத்தவரையில் சின்ன சின்ன நிகழ்வுகள் கூட பெரிய அளவில் காட்டப்படும். அந்த வகையில் கதிரின் ஹோட்டல் திறப்பு விழாவும் பிரம்மாண்டமாக காட்டப்படும் என தெரிகிறது . இதுக் குறித்த புரமோ இன்னும் சில நாட்களில் வெளியாகும்.  அதே போல், இந்த எபிசோடுகள் அடுத்த வாரம் டெலிகாஸ்ட் ஆகும் எனவும் தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி