Home /News /entertainment /

சீரியலுக்கு வில்லி மீனாவா? ஐஸ்வர்யாவா? ரசிகர்களை குழப்பி விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனர்!

சீரியலுக்கு வில்லி மீனாவா? ஐஸ்வர்யாவா? ரசிகர்களை குழப்பி விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனர்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

. அடுத்து என்ன நடக்கும்? ஐஸ்வர்யா மீனாவின் சண்டை முடிவுக்கு வருமா?

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் சமீபத்திய எபிசோடுகளால் மக்கள் குழம்பி போயியுள்ளனர். காரணம் மீனா - ஐஸ்வர்யாவின் சண்டையை வைத்து இயக்குனர் கதையில் விளையாடுவது தான்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு வந்திருக்கும் உண்மையான வில்லி யார்? என்ற குழப்பம் ரசிகர்களுக்கு மட்டுமில்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இருப்பவர்களுக்கும் ஏற்பட்டு விட்டது. பேச்சில் மீனாவையே மிஞ்சி விட்டார் ஐஸ்வர்யா. நேற்றைய தினம் வீட்டில் அரங்கேறிய சண்டையால் தனத்தின் முகத்தில் சிரிப்பே இல்லை. மீனா தான் எப்போதுமே வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டு வருவார். ஆனால் இந்த முறை ஐஸ்வர்யாவும் அவருடன் சேர்ந்து விட்டார்.

    இதையும் படிங்க.. டாக்டர் பாரதிக்கு தில்ல பார்த்தீங்களா? மறுபடியும் கண்ணம்மாவை தேடி போயிட்டாரு!

    மீனா vs ஐஸ்வர்யாவின் மோதல் தான் சீரியலில் இப்போது ஹைலைட்டான டாப்பிக். ஐஸ்வர்யா ஃபோன் பேசியதால் வெடித்த சண்டை இப்போது குடும்பமே இரண்டாக பிரியும் அளவுக்கு வந்து விட்டது. மீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் ஐஸ்வர்யா பேச, மீனாவுக்கு கோபம் தலைக்கு ஏறி விட்டது. இதனால் கோபித்து கொண்டார். ஆனால் ஐஸ்வர்யாவோ எதுவுமே நடக்காத மாதிரி மீனாவின் குழந்தை கயலுக்கு சாப்பாடு கொடுக்கிறார். இதை பார்த்து தனத்திற்கே குழப்பமாக இருக்கிறது. குழப்பம் தனத்திற்கு மட்டுமில்லை ரசிகர்களுக்கும் தான்.

    இத்தனை நாள் வரை ஐஸ்வர்யா தான் வில்லி, குடும்பத்தை பிரித்து விடுவார், எல்லாவற்றுக்கும் சண்டை போடுவார் என நினைத்துக் கொண்டிருக்க அப்படியே மாறினார் ஐஸ்வர்யா. ஆனால் மீனா மொத்த கோபத்தையும் ஜீவா மீது காட்டி, கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார். அதுமட்டுமில்லை சாப்பிடாமல் உண்ணாவிதரமும் இருக்கிறார். இதை எல்லாம் பார்த்து தனத்திற்கு பயம் அதிகமாகிறது. பெரிய சண்டை வந்து குடும்பம் பிரிந்து விடுமோ என்ற பயம் தனத்துக்கு.

    இதையும் படிங்க.. சிவகார்த்திகேயனின் அயலான் எப்படியிருக்கும்? – எடிட்டர் வெளியிட்ட தகவல்

    இதற்கிடையில், ஐஸ்வர்யாவை மன்னிப்பு கேட்க சொல்கிறார் மீனா. சண்டையை மறந்து மீனாவிடம் ஐஸ்வர்யா சமரசமாக வந்து பேசினாலும் மீனா சாந்தி அடைவதாக தெரியவில்லை. பதிலுக்கு ஐஸ்வர்யா மன்னிப்பு கேட்கும் படி கட்டளையிடுகிறார். அடுத்து என்ன நடக்கும்? ஐஸ்வர்யா மீனாவின் சண்டை முடிவுக்கு வருமா? என்பதற்கு நாளை தான் விடை கிடைக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி